திருப்பதி, அக்.6-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த கருட சேவையை காண சுமார் 7 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அப்போது நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது
கருடசேவை
மலையப்பசாமியின் கருடசேவையை தரிசனம் செய்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், மலையப்ப சாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் வரும்போது லட்சுமி ஆரம், சகஸ்ர நாமாவளி ஆரம், மகரகண்டி லட்சுமி ஆரம் போன்ற திருவாபரணங்களை அணிந்து வருவதால், அந்தக் கோலத்தில் சாமியை தரிசித்தால் பீடை விலகி- அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஒருசேர கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும்.
எனவே தென்னிந்தியா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து, திருமலையில் குவிந்தனர்.
9 பேர் காயம்
நேற்று ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதியது. இதில் நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
கருட சேவையை சுமார்
7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக, பக்த பிரமுகர் ஒருவர் மதிப்பிட்டார்.
திருமலையில் குவிந்த பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 சதவீதம் பேர் தமிழர்கள். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. அதன் காரணமாக, பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை பல இடங்களில் காண முடிந்தது. ராம் பக்ஷா தங்கும் விடுதி அருகே அதுபோல் மொழிப்பிரச்சினை ஏற்பட்டதால், குழப்பம் உருவானது. எனவே, போலீசார் லேசான தடியடி நடத்தி பக்தர்களை கலைத்தனர்.
24 மணி நேர தரிசனம்
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்று 24 மணி நேரமும் மகாலகு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443045&disdate=10/6/2008
No comments:
Post a Comment