ஒரிசா கலவரம் நீடிப்பு: 50 ஆயிரம் பேர் வீடு இழப்பு-உயிருக்கு பயந்து காடுகளில் தஞ்சம்
புவனேசுவரம், அக். 5-
ஒரிசாவில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சாமியார் லட்சு மானந்தா நக்சலைட்டு களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் ஒரிசாவில் கலவரம் வெடித்தது. இந்து அமைப்புகளை சேர்ந்த வர்கள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ் தவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கி சூடு ஆகியவற்றில் 15-க்கும் மேற்பட்டோர் பலி யானார்கள்.
இந்த கலவரம் தொடங்கி 1 மாதம் ஆகிவிட்ட நிலை யிலும் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.
தினமும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை இடித்து தள்ளி தீ வைக்கின்றனர்.
கலவரத்தில் கந்தமால் மாவட்டம்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல கிராமங்களுக்கும் போலீ சாரே நுழைய முடியவில்லை. ஒரிசா போலீசாருக்கு உதவ மத்திய போலீஸ் படையினர் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரிசா போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர்களால் கல வரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்து அமைப்பினர் காடு களில் பதுங்கி இருந்து திடீரென கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்து தாக்குகின்றனர்.
இதனால் பயந்து போன கிறிஸ்தவர்கள் காடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு திரும்பினாலும் தங்குவதற்கு வீடுகள் இல்லை. அவற்றை கலவரக்காரர்கள் நாசமாக்கி விட்டார்கள். இதனால் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக கந்தமால், கட்டாக், புவனேசுவரம் ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை நிரம்பி வழி கின்றன. வீடுகளை இழந்த 50 ஆயிரம் பேர் இங்குதான் தங்கி இருக்கின்றனர்.
கலவரத்தில் தப்ப ஓடிய வர்கள் பலர் குடும்பங்களை பிரிந்து விட்டனர். கணவரை பிரிந்த மனைவி, பெற்றோரை பிரிந்த குழந்தைகள் என பலரும் நிவாரண முகாம்களில் தவிக்கின்றனர்.
தொடர்ந்து கலவரம் நீடிப்பதால் அவர்கள் இப் போதைக்கு ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. அவர்களில் பலர் ஒரிசா போலீசாரையே குற்றஞ்சாட்டுகின்றனர். "கல வரக்காரர்கள் மீது போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசார் முன்னிலையிலேயே கலவர கும்பல் எங்களை தாக்கினார்கள். எனவே போலீ சை நம்பி ஊருக்கு திரும்ப முடியாது. எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'' என்கின்றனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
எனவே அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை தரும்படி கவர்னருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கவர்னர் அறிக்கை கொடுத் ததும் அடுத்த கட்ட நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
மத்திய உள்துறை மந்திரி சிவராஜ்பட்டீல் இதுபற்றி கூறும்போது, "ஒரிசா அரசால் கலவரத்தை அடக்க முடியவில்லை. அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் தான் கவர்னர் அறிக்கையை கேட்டு இருக்கிறோம்'' என்றார்.
No comments:
Post a Comment