|
பாகிஸ்தானில் எல்லை காந்தி பேரனை கொல்ல முயற்சி நடந்தது. அவரது வீடு மீது குண்டு வீசியதில் 5 பேர் பலியானார்கள்.பாகிஸ்தானில் அவாமி தேசிய லீக்கட்சியின் தலைவராக இருப்பவர் அஸ் பாண்டியார் வாலிகான். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான்அப்துல் வாலிகானின் பேரன் இவர். வட மேற்கு எல்லை மாகாணத்தில் இவரது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ரம்ஜான் பண்டிகையை யொட்டி அஸ்பாண்டியார் வாலிகான் சார்சதா பகுதியில் உள்ள தனது வீட்டில் பொது மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது சிலர் இவரது வீடு மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இந்த தற் கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது வீடு இடிந்தது. பாதுகாப்பு வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டையும் நடந்தது. தீவிரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலிலும் துப்பாக்கி சண்டையிலும் வாலிகானின் உதவியாளர் உள்பட 5 பேர் பலியானார்கள். வாலிகான் காயம் ஏதும் இன்றி தப்பி விட்டார். தலிபான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. |
No comments:
Post a Comment