Thursday, June 11, 2009

குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாகள்

குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாகள் என்று பெண் கைதி ஜெயந்தி புகார்
 
 
பெண் கைதிகள் குளித்ததை அதிகாரிகள் படம் பிடித்தார்களா?நாளை விசாரணை
 

கேரள மாநிலம் மூவாற்றுபுழா அருகே உள்ள சேர்ந்தமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் ஒரு வழக்கில் கைதாகி மூவாற்றுப்புழா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அந்த ஜெயிலின் குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாக ஜெயந்தி புகார் கூறினார்.  படம் பிடிப்பதை தட்டிக்கேட்ட தன்னை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஆலுவா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நாளை (12-ந் தேதி) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 
அப்போது ஜெயந்தி தனது மனுவில் சாட்சிகளாக சேர்த்துள்ள பெண் கைதிகள் சிலர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே ஜெயந்தி புகார் தொடர்பாக ஜெயில் உயர் அதிகாரிகள் மூவாற்றுப்புழா ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இதுபற்றி மூவாற்றுப்புழா ஜெயில் இன்ஸ்பெக்டர் பாபுகுமார்,   "ஜெயந்தி கூறுவதுபோல் ஜெயிலில் காமிரா பொருத்தி படம் எதுவும் எடுக்கவில்லை.


 பல்புகள் பொருத்தக்கூடிய ஹோல்டரில் காமிரா பொருத்தி வைத்திருந்ததாக அவர் கூறி உள்ளார். அதுபோல் ஹோல்டரில் காமிரா பொருத்த வாய்ப்பே இல்லை. எனவே ஜெயந்தி கூறுவது அப்பட்டமான பொய்" என்றார்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails