Saturday, June 20, 2009

சிரிக்கவும் ,சிந்திக்கவும்

சிந்தனைத்துளி

அன்பு

புகழும்போது வெட்கப்பட்டும், அவமானப் படுத்தும்போது அமைதியாக இருந்தும் பழக்கப் பட்டவன் எவனோ அவனே மனிதர்களில் ம்பட்டவன்!
அன்பு இதயத்தின் இளமை சிந்தனை அதன் வளர்ச்சி; மேடைப்பேச்சு அதன் முதுமை! - கலீல் இப்ரான்


அச்சம்-அடிமை

அடால்ப் ஹிட்லர் மெய்ன் கேம்ப் என்ற தன் சுயசரிதையில் எழுதியது:
உனக்குப் பகைவன் என்று யாரும் இல்லாவிட்டால் நீ பெரிய தலைவனாக முடியாது. அப்படியே உனக்குப் பகைவன் அல்லது பகை நாடு என்று இல்லாவிட்டால் உன்னுடைய நாடே அபாயத்தில் இருப்பதாக மக்களை நம்பவைக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் அச்சத்தை உண்டாக்கினால் - அவர்களை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம்.


தூற்றலும் - போற்றலும்!

தாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக் கழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் இலக்கணப் பிழை களை திருத்தும்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரப்பட்டது.
அதே பல்கலைக்கழகம் பின்னால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌர வித்தது.


புத்தசாலி!

மகாத்மா காந்தி என்ற ஆவணப்படம் வெளிவந்தபோது, அதன் தயாரிப்பாளர் ஏ.கே.செட்டியார் புதுமையாக ஹிந்து நாளிதழில் " Mahatma Gandhi in Celluloid" என விளம்பரம் செய்தார்.
மறுநாளே ஆந்திராவிலிருந்து ஒரு வக்கில்: Please send one dozen by VPP என்று தந்தி அடித்தார்.
சுயஉதவிக்குழு திட்டத்தின் ஆதிபிதா யூனஸ் என்பவர். வங்க தேசம் என்ற பங்களாதேஷ் பொருளாதார பேராசிரியரான இவர் 1976இல் துவங்கிய கிராமின் என்ற வங்கிகள் 53 லட்சம் பேருக்கு 2500 கோடி கடன் தந்துள்ளது.
இவர் பெற்றிருக்கும் கௌரவ பட்டம் 27. விருதுகள் 62. நோபல் பரிசு - அதன் மதிப்பு 7 கோடி.


கையூட்டுக்கு கையரகாதி

ஓ.வி.அழகேசன் அவர்கள் இரயில்வே அமைச்சராக பணியாற்றியபோது துணை அமைச்சர் வடக்கத்தியர். தொழிலதிபருக்கு உடனடியாக 50 இரயில்வே வேகன்கள் தேவை. துணை அமைச்சர் ரூ.50 ஆயிரம் கேட்க தொழிலதிபரால் 22 ஆயிரமே தரமுடிந்தது. பேசியபடி பணம் வராததால் துணை அமைச்சர் ஹயீயீசடிஎநன என்று அனுமதித்ததை முன்னால் சூடிவ சேர்த்துவிட்டார். பதறிப்போன பார்ட்டி மீதி 28 ஆயிரத்தையும் எண்ணி வைத்தார். உடனே சூடிவ ஹயீயீசடிஎநன என்றது சூடிவந ஹயீயீசடிஎநன ஆனது. இதைக் கண்டு பிடித்தவர் நம்ம அழகேசன்தான்!


ஜாதக லட்சணம்

ஜாதகத்தோடு சோதிடனை சந்திக்கிறான் ஒருவன். அதைப் பார்த்த சோதிடன் அவனிடமே ஜாதகக் குறிப்பை மௌனமாக திருப்பித் தருகிறார். வந்தவனோ உண்மையை சொல்லுமாறு வேண்ட, இன்னும் 50 நாட்களில் இந்த ஜாதகத்துக்கு உரியவன் உயிர் இழப்பான் என்கிறான். அவனோ அதிர்ச்சி அடையாது ரூபாய் ஆயிரம் எடுத்துத்தர, சோதிடன் அதிர்ச் சியாகிறான். உயிருக்கு ஆபத்து என்கிறேன். நீயோ பணம் தருகிறாயே என வியப்புடன் கேட்க, பரவாயில்லை பணத்தை வைத்துக் கொள்ளுங் கள். இது என் பார்ட்னர் ஜாதகம் என்றானாம்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails