Monday, June 1, 2009

டைட்டானிக் கப்பல் விபத்து:மில்வினா மரணம்

 
 
டைட்டானிக் கப்பல் விபத்து:உயிர் தப்பிய மில்வினா 95வருடங்களுக்கு பிறகு மரணம்
 
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு டைட்டானிக் என்ற சொகுசு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றது. இதில் 2,233 பயணிகள் இருந்தனர்.
 
கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 15-ந்தேதி அதிகாலை நடுக்கடலில் சென்றபோது பனிக்கட்டில் மோதி கப்பல் மூழ்கியது.
 
இதில் பயணம் செய்த 1517 பேர் உயிர் இழந்தனர். 706 பேர் உயிர் தப்பி படகில் ஏறி உயிர் தப்பினார்கள்.
 
இந்த விபத்து உலகில் நடந்த பெரிய கோர விபத்தாக கருதப்பட்டது.
 
1985-ம் ஆண்டு இந்த கப்பல் மூழ்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை மையமாக வைத்து டைட்டானிக் என்ற சினிமா படம் எடுக்கப்பட்டது. இது வெற்றிகரமாக ஓடியது.
 
இந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்கள் அனைவரும் காலப்போக்கில் இறந்து விட்டனர்.
 
மில்வினா டீன் என்ற பெண் மட்டும் உயிருடன் இருந்தார். மில்வினா டீன் விபத்து நடந்தபோது 2 மாத கைக்குழந்தையாக இருந்தார்.
 
அவருடைய தந்தை வெர்ட்ரம், தாயார் ஜார்செட்டா, சகோதரர் வெல்ட் ஆகியோர் கப்பலில் பயணம் செய்தனர். விபத்தில் தந்தை இறந்து விட்டார். மற்ற 3 பேரும் படகில் ஏறி உயிர் தப்பினார்கள்.
 
மில்வினா டீன் இங்கிலாந்து சவுதாம்டன் நகரில் வசித்து வந்தனர். 97 வயதாகி விட்ட அவர் சமீப காலமாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார். முதுமை காரணமாக அவர் இறந்து விட்டார்.
 
கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். ஆஸ்பத்திரி பில் கட்ட கூட முடியாமல் தவித்த அவருக்கு டைட்டானிக் பட ஜோடி லியாண்டர்டோ காப்ரியோ, கேதே வின்ஸ்லட் ஆகியோர் பண உதவி செய்தனர்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails