"நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்."என்னடா இப்படி ஜோக் எல்லாம் அடிக்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?பின்ன என்னங்க இந்த இலங்கை இராணுவ தளபதிக்கு பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை.நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர் அப்படின்னு சொன்னாலும் சொல்லிடுவாரு போலிருக்குது.இது வரை சமாதான பேச்சு,வெள்ளை கொடி போன்ற வார்த்தைகள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத இலங்கை அரசாங்கம் திடீர்ன்னு "அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்" என்று காதில் பூ சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்கள் விடும் ரீல் கொஞ்சம் பெருசாவே இருக்குது. அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார். இதெல்லாம் கேட்டு இலங்கை அரசாங்கத்தை தலையில் வைத்து கூத்தாட ஒரு சில கருங்காலிகள் இல்லாமலா இருக்கப்போகிறது. செய்தியை முழுமையாக படிக்க கீழே செல்லுங்கள். நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும்: இராணுவ தளபதி தெரிவிப்பு |
![]() |
Monday, June 1, 2009
நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்.-இலங்கை இராணுவ தளபதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment