கடவுள் இருக்கிறாரா?
ஒரு முறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்தில் "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?" என்று கேட்டார். இதற்கு பீர்பால் இந்த கேள்விக்கு உடனடியாக விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். சில நாட்கள் கழித்து கங்கை நதியில் அக்பர் தன் குடும்பத்தாரோடு படகில் செல்ல பீர்பால் தானும் உடன் வருவதாகக் கூறி ஏறிக் கொண்டாராம். ஆற்றின் ஆழமான பகுதியில் படகு செல்லும் போது அக்பரின் மூன்று வயது பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அதைக் கண்டு அரச குடும்பமே அலறி துடித்தது. நிலவொளியில் இசையைய் இரசித்துக் கொண்டிருந்த அக்பர் உடனே ஆற்றில் குதித்து தனது மூன்று வயது பேரனைக் காப்பாற்றினார்.
"முட்டாளே! நீ செய்த காரியத்திற்கு உன்னை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும். இருந்தாலும் நீ என் மந்திரி ஆகையால் உன்னை விட்டு வைக்கிறேன். ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?" என பீர்பாலை நோக்கி அக்பர் கோபமாகக் கேட்டார்.
அதற்கு பீர்பால், பதற்றமேதுமடையாமல், அரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி 'குழந்தையைக் காப்பாற்று' என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு கோபம் குறையாத அக்பர் குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது அரசனாக ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா? எனப் பதிலுக்கு கேட்டார். அப்போது பீர்பால், சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் அன்றைக்கு என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு விடை இது தான்.
source:கல்விச்சேவை anudhinam
உங்கள் உண்மையான நண்பரை அறிந்துகொள்ள ஆவலா?
No comments:
Post a Comment