Monday, June 8, 2009

விரைவில் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார் பிரபாகரன்

 
 
இலங்கையில் தற்போது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் ராணுவ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மின்சார வேலிகள் அமைக்கப்பட்டு போதுமான உணவு, மருந்து இல்லாமல் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள். முகாம்களில் உள்ள இளைஞர்களை ராணுவத்தினர் அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இதுவரை திரும்பிவரவில்லை. அவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது கூட தெரிய வில்லை.
தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து விரைவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கூடி போராட்ட திட்டங்களை வகுக்கும். இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முகாம்களின் நிலை குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அவருக்கு இருக்கிற உணர்வு கூட பிரதமர் மன்மோகன்சிங்கிற்கோ, முதல்-அமைச்சர் கருணாநிதிக்கோ இல்லை என்பது வருந்தத்தக்கது.
ஏற்கனவே ஐ.நா.சபை மனித உரிமை காப்பாற்றுவதில் இலங்கை அரசை கண்டித்து மேற்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக இந்தியாவாக்களித்து பெரும் துரோகம் புரிந்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்தியா கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இத்தகைய கடுமையான கண்டிக்கத்தக்க வகையில் ஆளானதே இல்லை.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பொறுத்தவரை நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறார். இலங்கையில் மக்களோடு மக்களாக இருக்கிறார். விரைவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அவர் அறிவிப்பார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ள அனைவரும் எல்லா நிலையிலும் ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுக்கிறார்கள்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails