Saturday, June 6, 2009

இலங்கை இந்தியாவை செருப்பால் அடிக்க ஆரம்பித்துவிட்டது

 
 
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. 

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரம் வழங்க மாட்டோம். ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம்.

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதை விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails