மனிதாபிமானம் மிக்கவர் மந்திரி மு.க.அழகிரி உதவியை மறக்க முடியாது; டெல்லியில் இருந்து திரும்பிய பயணிகள் பேட்டி
சென்னை, வண்ணாரப்பேட்டை பெஸ்ட் பிரண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்தியா முழுவதும் டூர் செல்வது வழக்கம். அதே போல 25 வது முறையாக இந்த ஆண்டும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி 140 பேர் 3 பிரிவுகளாக ரெயில் புக்கிங் செய்தனர். கடந்த 20-ந் தேதி ரெயில் மூலம் டெல்லி சென்றனர். 23-ந் தேதி ஆக்ராவை சுற்றி பார்த்தனர். 24-ந் தேதி அரித்துவார் சென்றனர். 25-ந் தேதி காஷ்மீர் சென்று அங்கு 4 நாட்கள் தங்கி மலை பிரதேசங்களை ஒவ்வொறாக மிகவும் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
காஷ்மீரில் அனைத்து இடங்களையும் சுற்று பார்த்து விட்டு 29-ந் தேதி காஷ்மீரில் இருந்து 12.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்படும் ஜி.டி. ரெயில் மூலம் சென்னை வருவதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.
ஆனால் விமானம் 12.25 மணிக்கு புறப்படாமல் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ரெயிலை பிடிக்க முடியாமல் போனது.
எனவே ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்காமல் போராட்டம் செய்தனர். உடனே விமான அதிகாரிகள் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இதனை நம்பிய பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எதுவும் செய்யாமல் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமலும், முதியவர்களும், குழந்தைகளும் தவித்துள்ளனர். உடனே சுற்றுலா பயணிகள் தமிழ் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மேலும் மத்திய மந்திரியாக பதவியேற்றிருக்கும் மு.க. அழகிரி டெல்லி வருகிறார் என்ற தகவலும் தெரிய வந்தது.
உடனே சுற்றுலா பயணிகள் மு.க.அழகிரி வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இரவு 11.45 மணிக்கு மு.க. அழகிரி டெல்லி வந்தார். அவரை பார்த்ததும் பயணிகள் அனைவரும் கண்ணீருடன் நடந்த விபரத்தை கூறி உள்ளனர்.
உடனே அவர் ஆறுதல் கூறி விட்டு 10 நிமிடத்தில் நான் உங்களுக்கு போன் செய்கிறேன் என்றார். ஒருவருடைய போன் நம்பரையும் வாங்கி கொண்டு சென்றார்.
அதன்படி சரியாக 10 நிமிடத்தில் போன் செய்து உங்களுக்கு 2 பஸ் அனுப்பி உள்ளேன் அதில் நீங்கள் தமிழ்நாடு இல்லத்திற்கு வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து பயணிகள் பஸ்சில் தமிழ்நாடு இல்லம் சென்றனர்.
அங்கு மு.க.அழகிரி அவர்களை வரவேற்று எம்.பி.க்கள் தங்கும் 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்தார். அதிகாலை 3.45 மணிக்கு சாப்பாடு, காப்பி, போன்றவை வழங்கினார். மேலும் ஒரு அதிகாரியை பயணிகளுடன் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்ய உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜிக்கு தொடர்பு கொண்டு நடந்த விபத்தை கூறி அவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க தனி பெட்டி ஒன்று ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவரும் மறுப்பு ஏதும் தெரி விக்காமல் உடனே ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி தமிழ்நாடு எக்ஸ் பிரசில் தனி பெட்டி மூலம் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டனர். புறப்படும் முன்பு மு.க.அழகிரியை தமிழக பயணிகள் சந்தித்து கண்ணீர் மல்க பூங்கொத்து, பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர். நீங்கள் மட்டும் இல்லா விட்டால் எங்கள் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியவில்லை இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.
இந்த சுற்றுலா பயணிகள் ரெயில் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த பயணிகளை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். சென்னை வந்த சுற்றுலா பயணிகளிடம் டெல்லியில் நடந்த நிலமை குறித்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
ஜெயராமன் (கோவில் பட்டி):- நாங்கள் குழந்தைகளுடன் டெல்லி விமான நிலையத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது கடவுள் போல மு.க. அழகிரி வந்தார். நாங்கள் அவரிடம் எங்கள் நிலை மையை கூறினோம்.
உடனே அவர் எங்களிடம் முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா மிகவும் அன்போடு விசாரித்து, கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று கூறி 2 பஸ் மூலம் எம்.பி.க்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்து, சாப்பாடு, காப்பி என அனைத்து வசதிகளையும் செய்து தந்தார். மு.க.அழகிரியின் மனிதா பிமானத்தை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றனர்.
No comments:
Post a Comment