Thursday, June 4, 2009

இலங்கை என்ற பயங்கரவாதநாடு இராணுவ ரீதியில் வென்றது எப்படி

 

army.lkபயங்கரவாதம் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் தேடினால், பின்வருவனவற்றை கண்டுகொள்ளலாம். வன்முறையையும பயமுறுத்தல்களையும் கைக்கொண்டு தமது அரசியல் இலக்கை அடைய முயற்சித்தல். பயங்கரவாதத்தால் நாடு முழுவதும் அச்சம் நிலவும் சூழ்நிலை உருவாக்கப்படும். மேலும் பயங்கரவாதமானது நாட்டை அரசாள்வதற்கும் அல்லது அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும் பயன்படும்.

நாம் மேற்கண்ட இந்த வரைவிலக்கணத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தையும் இலகுவாக பயங்கரவாதம் என முத்திரை குத்திவிட முடியும்.

ஏகாபத்திய நாடுகள் தமது சொந்த நலன்களுக்கேற்ப இவ்வாறு இயக்கங்களை தாமோ மற்றும் தமது கைப்பாவையான ஐநா சபையைக்கொண்டோ தடை செய்துவிட முடியும். இங்கே அவர்களது அரசியல் இலக்கு என்ன என்பதோ எதற்காக போராடினார்கள் என்பதோ கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

அதேநேரத்தில் தம்மை ஜனநாயக நாடுகள் என்றும் நாகரிகவாதிகள் என்றெல்லாம் அலைத்துக்கொளும் இந்த நாடுகள் , அந்த விடுதலைபோராட்டத்தை அடக்க , அந்த நாடுகள் செய்யும் பயங்கரவாதத்தை பற்றி தத்தமது பொருளாதார நலன்களுகேற்ப மென்மையான வார்த்தைகளில் கண்டிப்பதுடன் நின்று விடுகின்றன.இதற்கு நேரில் வாழும் உதாரணம் இலங்கையும் அதன் இனவெறி அரசும்.

இலங்கையில் ராஜபக்ச பதவியேற்றவுடன் அறிவித்த முதல் செய்தி , புலிகளுடன் வடக்கு கிழக்கு மக்களின் நலனுக்காக செய்து கொள்ளப்பட்ட சுனாமி கட்டமைப்பு ரத்து என்பதே ஆகும். இதன் மூலம் ஒரு நிர்வாக பரவலாக்கத்திற்கே தான் தயாரில்லை என்னிடம் எந்தவொரு அரசியல் அதிகார பரவலாக்கத்தையும் எதிபாராதீர்கள் எனக்காட்டினான். ஆயுதங்களை தாரளமாக இந்தியா, சீனா , பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து வாங்கிக்குவித்தான். இந்த நாடுகளும் அவனுக்கு தத்தமது பொருளாதார நலன் சார்ந்து உதவ முன்வந்தன. இலங்கையில் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் எனக்கண்டு கொள்ளப்பட்டோர்களை வெள்ளை வானில் கடத்தி கொலை செய்தான்.

சில நடுநிலையான சிங்களவர்களை புலி ஆதரவாளர்கள் என சிறையில் அடைத்தான். நடுநிலையான ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தும் ராணுவ புலனாய்வாளர்களை மற்றும் தமிழ் எட்டபர்களான கருணா , டக்ளஸ் மற்றும் புளொட் எனப்படும் கூலிபடைகளை வைத்து போட்டு தள்ளினான். அவன் எதிர்பார்த்த " அச்சம் தரும் சூழ்நிலை " உருவானது. அதன் பின்னர் தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுபினர்களை குறிவைத்து சிலரை கொன்றும் பலரை நாட்டை விட்டும் வெளியேற செய்தான். இதே நேரத்தில் இந்து ராம் போன்ற தமிழின விரோதிகளை அழைத்து " ஸ்ரீ லங்கா ரத்னா" எனும் பட்டம் கொடுத்து நன்கு "கவனித்து" தமிழ் படுகொலைகளை தமிழ் நாட்டில் மறைக்க முன்னேற்பாடுகளை செய்து கொண்டான்.

அடுத்த கட்டமாக ஏற்கனவே பயங்கர வாத ராணுவமாக இருந்த ஸ்ரீ லங்கா ராணுவத்தை , கொலை வெறி ராணுவமாக கட்டி எழுப்பினான். மனித உரிமை என்பதையே மறந்து விடுங்கள் எனத் தைரியமூட்டினான். தமிழ் பிரதேசங்கள் மேல் பொருளாதார தடைகளை விதித்து உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான். பசிப்பிணியால் வாடிய மக்கள் மருந்தின்றி போக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர். கப்பல் கப்பலாக 

ஆயுதங்களை இறக்கி இந்தியா , பாகிஸ்தான் , சீனா மற்றும் ரஷ்யாவுடன் ராணுவ உடன்படிக்கைகளை செய்து கொண்டான். போரும் ஆரம்பித்தது. இந்திய ராடார்கள் துணையுடன் , அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்த இலக்குகளினை , பாகிஸ்தான் விமானிகளின் மேற்பார்வையில் , சீனக் குண்டுகளை கொத்துகொத்தாக இலங்கை விமானப்படை தமிழ் மக்கள் மீதும் புலிகள் மேலும் வீசிக் கொன்றது. இந்திய கடற்படை உதவியுடன் , புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலை நாடுகள் புலிகளின் நிதி மூலத்தை தடை செய்தன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழகம் கொந்தளிக்க , மனித சங்கிலி மற்றும் தந்தியடிப்பு எனப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. தம்மை தாமே வேள்வி தீயில் தமிழுணர்வாளர்கள் எரிதுக்கொண்டனர். கடையடைப்புகள் மூலம் தம்மைத்தாமே வருத்தி கொண்டனர். காந்தி இருந்த உண்ணாவிரதம் கூட இருந்து பார்த்தனர் . காந்திதேசமே அலட்சியப் படுத்தியது.

முழு உலகத்துக்கும் எதிராக போராடிய புலிகள் இயக்கம் 3 வருடங்களின் பின்னர் ஒரு நயவஞ்சகமான காட்டிகொடுப்புடன் முற்றுமுழுதாக ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. மக்களின் உரிமையை பெற்றுத் தராத இலங்கை போன்ற பயங்கர வாத நாடுகள் இருக்கும் வரை , உரிமைப் போர் என்பது வேறு வேறு களங்களில் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails