தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.
இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.
பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.
""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.
உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.
ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.
ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.
சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.
தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.
புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.
No comments:
Post a Comment