Friday, June 5, 2009

20 ஓவர் உலக கோப்பை அட்டவணை

 
இன்று (05.06.09) தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.


ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரு அணிகளுக்கு தரநிலை அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.  ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஏ1
இந்தியா, ஏ2 வங்காளதேசம் ஆகும்.  பி' பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து முறையே பி1, பி2 அந்தஸ்தை பெற்றுள்ளன. இதே போல்  சி' பிரிவில் ஆஸ்திரேலியா (சி1), இலங்கை (சி2),  டி' பிரிவில் நிழூசிலாந்து (டி1), தென்ஆப்பிரிக்கா (டி2) ஆகிய அணிகளுக்கு ஐ.சி.சி. தரநிலை வழங்கி உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தரநிலை பெறாத அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ அந்த அணியின் தரநிலை வழங்கப்படும்.

மேலும், லீக் சுற்று முடிவில் முதல்நிலை தர அந்தஸ்து பெற்ற ஒரு அணி தனது பிரிவில் 2 வது இடத்தை பிடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும், தரநிலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. உதாரணமாக  ஏ' பிரிவில் லீக் முடிவில் வங்காளதேசம் முதலிடமும், இந்தியா 2 வது இடமும் பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் போது இந்தியா ஏ1 அணி என்றே கருதப்படும். அதில் மாற்றம் கிடையாது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள்  இ ,  எப்  என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில்  இ  பிரிவில் ஏ1, பி2, சி1, டி2 ஆகிய அணிகளும்  எப்  பிரிவில் ஏ2, பி1, சி2, டி1 ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோத வேண்டி வரலாம்.

தேதி மோதல் பிரிவு இடம் இந்திய நேரம்

ஜுன் 5: இங்கிலாந்து ஆலந்து பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 6: நிழூசிலாந்து ஸ்காட்லாந்து டி லண்டன் பிற்பகல் 2.30 மணி

ஜுன் 6: ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சி லண்டன் மாலை 6.30 மணி

ஜுன் 6: வங்காளதேசம் இந்தியா ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி

ஜுன் 7: ஸ்காட்லாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் மாலை 6 மணி

ஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை சி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 9: ஆலந்து பாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி

ஜுன் 9: நிழூசிலாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 10: இலங்கை வெஸ்ட் இண்டீஸ் சி நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 10: இந்தியா அயர்லாந்து ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 18: முதலாவது அரைஇறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 19: 2 வது அரைஇறுதி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails