Thursday, June 11, 2009

பிரபாகரன் சித்ரவதை :இலங்கை அரசுக்கு மனித உரிமை அமைப்பு வைத்த ஆப்பு

இதுவரை இலங்கை அரசாங்கம் ஊரை ஏமாற்றி தேசிய தலைவர் பிரபாகரனை கொன்று விட்டோம்.அவரது மூத மகன் சார்லஸ் ஆண்டணியையும் கொன்றுவிட்டோம் என்று ஊதிவந்தனர்.
 
ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் இலங்கை அரசாங்கத்தையும் விட அழகாக பொய் சொல்ல முடியும் என்பதை மனித உரிமை அமைப்பு நிருபித்து உள்ளது.
 
அதாவது தேசிய தலைவரின் மூத்த மகனை மட்டும் அல்ல அவரின் இளைய மகனையும் கொன்றீர்கள்.அதுவும் தலைவரின் கண் முன்பாகவே கொன்றீர்கள் என்று உதார் விட்டு உள்ளது.
 
முதலில் தலைவர் அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் இந்த சிங்கள காட்டு மிராண்டிகள் அவரை பூபோலவா கொன்றிருப்பார்கள்.அவரின் உடல் என்று அடையாளம் காட்டப்பட்ட உடலில் ஒரு சிறிய கீரல் கூட இல்லை.ஒன்றுமே அறிவு இல்லாத பையித்தியக்காரர்களிடம் போய் சொன்னால் கூட இதை பற்றிக் கேள்வி கேட்பார்கள்.
 
ஆனால் இணையத்தில் ஒரு சில பைத்தியங்கள் அதையே திரும்ப திரும்ப ஓதிவருகிறார்கள்.இந்த சாத்தான்கள் இதே வேதத்தை ஓதட்டும்.ஆனால் காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்.
 
 
 
 
 
 
பிடித்து வைத்து சித்ரவதை பிரபாகரன் கண் முன்பு மகனை சுட்டு கொன்றனர் மனித உரிமை அமைப்பு பரபரப்பு தகவல்
 
 
 
ஆனால் பிரபாகரனை சிங்கள ராணுவத்தினர் உயிருடன் பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. ராணுவ தளபதிகளிடம் இருந்து திரட்டிய தகவல் அடிப்படையில் இதை கூறுவதாக கூறும் அவர்கள் இது தொடர்பாக 48 பக்க அறிக்கை ஒன்றையும் தயாரித்து உள்ளனர்.
பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பே அவரை ராணுவத்தினர் உயிருடன் பிடித்தனர். அதேபோல அவருடைய 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனையும் உயிருடன் பிடித்தனர். பிரபாகரனை ராணுவத்தினர் சித்ரவதை செய்தார்கள். பிரபாகரன் கண் எதிரே பாலச்சந்திரனையும் சித்ரவதை செய்தனர். பின்னர் அவர் கண் முன்பே பாலச்சந்திரனை சுட்டுக்கொன்றனர். அடுத்து பிரபாகரனையும் கொன்றனர்.
ராணுவ மூத்த அதிகாரிகள் நேரடி பார்வையிலேயே இந்த சித்ரவதைகள் நடந்தன. ஆனால் ராணுவ அதிகாரிகள் இதை மறுத்து விட்டனர்.பிரபாகரன் பிடிபட்ட பிறகு மீதம் உள்ள அனைத்து விடுதலைப்புலிகளையும் கைது செய்து பின்னர் அவர்களை ஒட்டு மொத்தமாக சுட்டுக்கொன்றனர். பிரபாகரன் மனைவி மதிவதனி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை ராணுவம் மறைக்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியன், கரிகாலன், யோகி, லாரன்ஸ் திலகர், பாலகுமார், இளம்பரிதி, ஈழன் ஆகியோர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அவர்கள் தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails