Saturday, June 20, 2009

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது: நடிகை அமலா

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
 
நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
 
நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்.
 
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்ததை மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைத்தேன். ஆனால் அதில் எல்லாம் விட எனக்கு விலங்குகளுக்காக செய்து வரும் சேவைதான் உண்மையான மகிழ்ச்சியை தந்துள்ளது. எனது சேவைகளுக்கு கணவர் நாகார்ஜுன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails