Friday, June 26, 2009

ஒரு பிரபாகரனை ஒழித்து விட்டு, நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை உருவாக்கும் பின்புலம் உருவாகியுள்ளது

ஒரு பிரபாகரனை ஒழித்து விட்டு, நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை உருவாக்கும் பின்புலம் உருவாகியுள்ளது – மங்கள சமரவீர:

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு, இலங்கையில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் உண்மையான நோக்கம் இல்லை என எமது தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழு மற்றுமொரு நாடக குழு மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடபகுதியின் பிரச்சினைக்கு தீர்வான சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழு முன்வைத்துள்ள 13வது அரசியல் சாசனத் திருத்தத்தின் பெறுமதி குறித்து, திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர, ராஜித சேனாரத்ன, திலான் பெரேரா ஆகிய அமைச்சர்கள் கருத்துக்களை வெளிட்ட போதிலும், விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் 13வது அரசியல் சாசனத்தை விமர்சித்து வருகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின், ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரிலேயே அவர்கள் அதனை விமர்சித்து வருகின்றனர்.

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தமது வீடுகளுக்கு விரைவில் செல்லவே விரும்பம் கொண்டுள்ளனர். ஆனால் முகாம்களில் உள்ள மக்கள் கைதிகளை போல் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு பிரபாகரனை ஒழித்து விட்டு, நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை உருவாக்கும் பின்புலம் உருவாக காரணமாக அமைந்து விடும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails