Sunday, June 21, 2009

நடிகர் ஷாருக்கான் இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கம்:அவருடைய திருமணமும் செல்ல்லாது:மதகுருக்கள்

நடிகர் ஷாருக்கான் இஸ்லாம் மதத்திலிருந்து  நீக்கமா


இந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ஒரு வார இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


 இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள தருல்-உலும் மஜேஹர் இஸ்லாம் அமைப்பின் தலைவர் முப்தி மோதியுர் ரகுமான் ரிஸ்வி மற்றும் மற்றொரு அமைப்பின் தலைவர் முப்தி முகமது சுயேப் ரஸா ஆகியோர் ஷாருக்கானுக்கு எதிராக இன்று தனித்தனியாக `பட்வா` உத்தரவு பிறப்பித்தனர்.

அதில், `சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை வெளியிட்ட ஷாருக்கான், இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடைய மனைவியுடன் செய்து கொண்ட திருமணம் (நிக்காஹ்) சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது. மனைவியுடன் அவரது உறவுமுறையும் சட்ட ரீதியானது அல்ல.

தான் தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், மயான பூமியில் அவருக்கு இடம் அளிக்கப்பட மாட்டாது' என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, `முகமது நபிகளுக்கு எதிரான கருத்துகளோ சிந்தனையோ தன்னிடம் கிடையாது என்றும் எழுத்துப் பிழை காரணமாக அத்தகைய தவறு ஏற்பட்டு விட்டது' என்றும் நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்து இருக்கிறார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails