Friday, June 19, 2009

கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது

இன்று முதல் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது

இன்று இரவு 11 மணியில் இருந்து ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது.

இரவு 11 மணி ஆனதும் வங்க தேசத்தில் உள்ள எல்லா கடிகாரத்திலும் மணியை 12 என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா. ஒரு மணி நேரம் காணாமல் போய்விடும். அப்படித்தானே நினைக்கிறீர்கள். அதுவும் கரெக்ட்தான். ஆனால் இதில் அந்நாட்டுக்கு ஒரு லாபம் இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. எப்படி என்றால், நாளை காலை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் போக வேண்டும், அலுவலகத்துக்கு, மற்ற நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு செல்ல வேண்டும்.

இன்று வரை காலை எட்டு மணிக்கு தான் எட்டு மணி என்று இருந்திருக்கும். நாளையோ ஏழு மணிக்கே எட்டு மணி என்று கடிகாரம் காட்டப்போகிறது. எனவே இன்று இரவு ஒரு மணி நேரம் குறைந்தது ( 11 முதல் 12 ), நாளை பகல் ஒரு மணி நேரம் கூடுதலாக இருப்பது போல தோன்றும்.

நாடு முழுவதும் இப்படி இருக்கப்போவதால் ஒரு மணி நேர மின்சார உபயோகம் மிச்சமாகிறது. எனவே பகலிலேயே ஆபீஸ் முடிந்து விடும். கடைகள் கூட ஓரளவு பகலிலேயே அடைக்கப்பட்டு விடும். இதன் மூலம் ஒரு மணி நேர மின் உபயோகத்தை மிச்சப்படுத்தலாம் என்று வங்காளதேச அரசு கருதுகிறது.

பல நாடுகள் ஏற்கனவே இந்த மாற்றத்தை செய்திருக்கிறது என்றும் இப்போதுதான் நாங்கள் இதனை செய்ய இருக்கிறோம் என்றும் வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை 103 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails