Thursday, June 11, 2009

ராஜபக்செவின் அரசை கண்டித்து சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் சிங்கள கட்சி!

ராஜபக்செவின் அரசை கண்டித்து சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் சிங்கள கட்சி!

nerudal-tamil-news120 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்செ செய்த தவறுதான் இன்றை இலங்கையின் பேரழிவுக்கு காரணம் என்று இலங்கையின் முக்கிய சிங்கள கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ராஜபக்செவின் இந்த போக்கை கண்டித்து இலங்கை அரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிக்கப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க செய்தியாளர்களிடம் கூறியது,'  கடந்த 1987 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசினால் கொண்டவரப்பட்ட 13வது சட்டத்திருத்ததை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்செ எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

ஆனால் இப்போது அந்த திருத்தத்தை ஏற்க இருப்பதாக கூறியுள்ளார்.  இந்த சட்ட திருத்தத்தை 20ஆண்டுக்கு முன்பே ஏற்றுக்கொண்டிருந்தால் அதை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் ஏற்றுக்கொண்டிருப்பார்.

20 ஆண்டுகளாக நாட்டில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன.  இந்த அழிவுகளுக்கு முழுப்பொறுப்பையும் ஏற்று நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்வரும் பிப்பிரவரி 4 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் அதில் ஐ. தே.கட்சி கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவுள்ளோம்.  ஐ.தே.கட்சி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை ராஜபக்செ  இல்லாமல் செய்திருக்கிறார் இதை கண்டித்தே சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்." என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails