Tuesday, June 23, 2009

வேகமாக பரவும் மின்னஞ்சல் மோசடி செய்திகள் வாசகர் கவனத்திற்கு

தமிழ்ஷ்கை இணையதளம் தன்னுடைய வாசகர்களுக்கு கீழகண்ட ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

 

 

வேகமாக பரவும் மோசடி மின்னஞ்சல் செய்திகள் தமிழ்ஷ்கை வாசகர் கவணத்திற்கு

 
 

வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது.

தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூறி மின்னஞ்சல் அனுப்புகிறார்.

வவுனியா அகதி முகாம்களுக்குள் சென்று வரும் அலுவலர்களுடன் ஆலோசகர் என்ற ரீதியில் தனக்கு தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தவற விட்ட உடமைகளைத் தேடி எடுப்பதற்கும், இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் கூட தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றவாறு இவரது மின்னஞ்சல் நீண்டு செல்கிறது.

கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இதுபற்றி தாம் ஏற்கெனவே கனடாவின் சகல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இது போன்ற மோசடிப் பேச்சுக்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து மக்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுள்ளார். எமது மக்களின் துக்கத்தையும் அங்கலாய்ப்பையும் பயன்படுத்தி அந்த நபர் பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதால் இதுபற்றி விழிப்புடன் இருக்குமாறு வாசகர்களை நாமும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails