Friday, June 26, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரனை நானே கொலை செய்தேன்

'புலிகளின் தலைவர் பிரபாகரனை நானே கொலை செய்தேன் என்று புதுக்கதை,
 
பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்' என்று கூறிய பிரபல சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு
புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:-

பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார்.

அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதான சோதிடர் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பங்குபற்றுவதுடன், வாராந்த பத்திரிகைகளுக்கும் சோதிட எதிர்வு கூறல்களை எழுதி வருகின்றவராவார்.

இந்த நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் கூட்டம் ஒன்றின் போது,  தற்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாகவும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் ஆகுவார் என கூறியிருந்தாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றியை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரபலமாக பேசப்படும் நிலையில், இந்த எதிர்வு கூறல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது கருத்தைக் கூறியமைக்காக சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இந்நாட்டில் சோதிடர்கூட தனது கருத்தைக் கூறமுடியாதுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails