|
ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் தரவரிசையிலு உள்ள சுவிஸ்.வீரர் ரோஜர் ஃபெடரரை, முதலாம் தரவரிசை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 5 செட்கள் ஆட்டத்தில் வீழ்த்தி ஆஸி.ஓபன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றார். சுமார் 4 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அதி அற்புதமான போட்டித்தன்மை மிகுந்த உயர் தர டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் 7- 5, 3- 6, 7- 6, 3- 6, 6- 2 என்ற செட்களில் அயாராது போராடி ஃபெடரரை வீழ்த்தினார். அதிக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பீட் சாம்பிராஸை சமன் செய்யும் ஃபெடரரின் கனவை ரஃபேல் நடால் மீண்டும் முறியடித்தார். முதல் செட்டின் துவக்கத்திலேயே இருவரும் மாறி மாறி தங்களது சர்வை தோற்றனர். பிழையினால் அல்ல இருவரும் அபார டென்னிஸை விளையாடினர். ஆனால் ரஃபேல் நடால் 3வது முறை ஃபெடரர் சர்வை முறியடித்த போது முதல் செட்டை 7- 5 என்று வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில் ஃபெடரர் இரண்டு நடால் சர்வ்களை முறியடித்து அபரமான தரை ஷாட்களில் ஃபோர் ஹேண்டில் தனது திறமையை வெளிப்படுத்தி செட்டை 6- 3 என்று கைப்பற்றினார். 3-வது செட்டிலும் இருவரும் தங்களது சர்வை தோற்றாலும் பிறகு மீண்டு 6- 6 என்று சமன் முறிவுக்கு தள்ளினர். இதில் ஃபெடரர் சில தவறுகளைச் செய்ய இந்த முறை ரஃபேல் நடால் அபாரமான ஃபோர் ஹேண்ட், பேக் ஹேண்ட், வாலி ஷாட்களை ஆடி ஃபெடரர் பிரமிக்க வைத்து 7- 3 என்று டை பிரேக்கரில் வெற்றி பெற்று 2- 1 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்த செட்டில் மீண்டும் ஃபெடரர் எழுந்தார். இரண்டு பிரேக்குகளை கொடுத்து செட்டை 6- 3 என்று கைப்பற்றினார். கடைசி செட்டில் ஃபெடரரின் ஷாட்கள் பல நெட்டில் அடித்தும் வெளியில் சென்றும் அவருக்கு நிலை தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடைசியில் ஃபெடரரின் உடல் மொழி ஆட்டத்தை அவர் கைவிட்டது போல்தான் தெரிந்தது. கடைசி செட்டை இதனால் 6- 2 என்று நடால் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஃபெடரரின் சர்வை முறியடித்து கடைசியாக ஒரு அபாரமான ஃபோர் ஹேன்ட் ஷாட் மூலம் வெற்றி பெற்றார் நடால். ரஃபேல் நடாலின் 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும் இது. 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் ஃபெடரர் சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்ய விடாமல் விம்பிள்டன் மற்றும் தற்போது ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸிலும் ஃபெடரரை வீழ்த்தியுள்ளார் நடால். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233510937&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment