Sunday, February 1, 2009

சுதந்திரபுரத்தில் அகோர ஷெல் வீச்சு 50 பேர் உயிரிழப்பு; 169 பேர் காயம்

   அச்சிடு E-mail
 
 
 
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயப் பகுதியிலும் உடையார்கட்டுப் பகுதியிலும் நேற்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்ற அகோர ஷெல் தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதுடன் 169 பேர் காயமடைந்துள்ளனர்.
 

சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் இடம்பெயர்ந்து பெருமளவில் தங்கியிருந்த பொது மக்கள் மீது நேற்றுக் காலை 9.30 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இதேபகுதி மீது மீண்டும் நண்பகல் 12.30 மணியளவில் மீண்டும் பின்னர் பிற்பகல் 2 மணியளவிலும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 
இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் அந்தப் பகுதி மக்களின் குடியிருப்புகள் பெருமளவு அழிந்துள்ளதுடன்இ உடைமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, உடையார்கட்டுப் பகுதி நோக்கி நேற்றுக் காலை 5.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக கடும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புப் பகுதி நோக்கியும் நேற்றுக் காலை தொடக்கம் அகோர பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
தேவிபுரம் பகுதியில் நடைபெற்ற கடும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன்இ 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தேராவில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
 
மூங்கிலாறுப் பகுதியில் நடைபெற்ற தக் குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் எண்மர் காயமடைந்துள்ளனர். வலைஞர் மடம் பகுதி யில் நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் எண்மர் காய மடைந்துள்ளனர்.
 
கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும் மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails