Sunday, February 1, 2009

நியூஸீலாந்து அபார வெற்றி

 
lankasri.comஆஸ்ட்ரேலியா-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் கடைசி பந்தில் ஸ்கோர்கள் சமமாக இருந்த நிலயில் வெட்டோரி பவுண்டரி அடிக்க 185 ரன்கள் எடுத்து நியூஸீலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

வெற்றி பெற 182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து ஆஸ்ட்ரேலியாவின் அபார பந்து வீச்சிற்கு 4 விக்கெட்டுகளை 64 ரன்களுக்கு இழந்தது. அதன் பிறகு புரூம் சிறப்பாக விளையாடி டெய்லருக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்தது.

அப்போது 29 ரன்களில் கிளார்க் பந்தில் பௌல்டு ஆனார். ஆனால் அதன் பிறகு கைல் மில்சும், ராஸ் டெய்லரும் இணைந்து அபாரமாக விளையாடினர். அப்போது 3-வது பவர் பிளே எடுக்கப்பட்டது. இதில் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்கள் சரியாக வீசவில்லை.

இதனால் 11 ஓவர்களில் இருவரும் 62 ரன்களைச் சேர்த்தனர். மில்ஸ் 26 ரன்களில் டெய்ட் பந்தில் அவுட் ஆனார்.

டெய்லர் இந்த வெற்றிக்கு வித்திட்ட வீரர் 64 ரன்கள் எடுத்து பிராக்கன் பந்தில் ஆட்டமிழக்க ஆட்டம் சற்றே பரபரப்பானது.

15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சவுத்தீ தேவையில்லாமல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது 4 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்றானது.

அதன் பிறகு மூன்று சிங்கிள்கள் எடுக்க ஸ்கோர் சமன் ஆனது. பிறகு கடைசி பந்தில் வெட்டோரி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

4 விக்கெட்டுகளையும் 25 ரன்களையும் எடுத்த கைல் மில்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்டார்.

இரு அணிகளுக்குமான 2-வது ஒரு நாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மெல்போர்னில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233510828&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails