Sunday, February 1, 2009

புலிகள் ஆதரவு முழக்கங்கள் : முத்துக்குமார் அஞ்சலி ஊர்வலத்தில் பொங்கிய ஈழ உணர்வு!

 
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர்கள், திரைப்பட படைப்பாளிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பெருமளவில் பங்கேற்றனர்.

முத்துக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் படங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பல்வேறு அமைப்பினர் ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழீழம் அமைந்தே தீரும் என்றும், ஈழம் வாழ்க என்றும், மேதகு பிரபாகரன் வாழ்க என்றும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வழி நெடுகிலும் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களில் பலரும் பிரபாகரன் படத்தை பிடித்திருந்தனர். குழந்தைகள் கைகளிலும் பிரபாகரன் படமும், புலிக்கொடியும் காணப்பட்டன.

இந்த காட்சிகளைக் கண்டும், முழக்கங்களை கேட்டும் மகிழ்ச்சியடைந்த ஈழ ஆதரவாளர்கள், முத்துக்குமார் விருப்பம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் புலிகள் ஆதரவு முழக்கங்கள் எழுப்பி சென்றனர். முத்துக்குமாரின் மரணத்திற்கு பிறகு ஈழ ஆதரவை வெளிப்படையாக மீண்டும் வெளிப்படுத்தியதை அதிகமாகக் காண முடிந்தது.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233434744&archive=&start_from=&ucat=&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails