Friday, January 1, 2010

இந்து சமுதாயத்திற்கு மலேசியாவில் ஆபத்து


 
 கோலாலம்பூர்:"மலேசியாவில் இன்னும் சில காலங்களில் இந்திய சமுதாயத்தினர் காணாமல் போய் விடுவர்' என, அந்நாட்டின் இந்து சங்க துணைத் தலைவர் பாலா தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.முன்பு பிரிட்டிஷார் காலத்தில் அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களை அழைத்துச் சென்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பினர். அங்கு வாழும் இந்தியர்கள் மலேசியக் குடியுரிமை பெற்றனர். இன்றுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு வாழும் இந்தியர்களுக்கு அதிக நெருக்கடிகள் வரத் துவங்கி விட்டன.


இந்த சூழ்நிலையில் அவர் மேலும் கூறியதாவது:மலேசியாவில் இந்திய சமூகத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர். அதேநேரத்தில், ஒரே ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலங்களில் மலேசியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஒரு கால கட்டத்தில் இந்திய சமுதாயத்தினரே இல்லாமல் போய் விடுவர்.இவ்வாறு தர்மலிங்கம் கூறியுள்ளார். அவர் கருத்தை, "தமிழ் நேசன்' நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.பன்முக கலாசாரம் கொண்ட மலேசியாவில் மலாய் இனத்தவர் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர்கள் 25 சதவீதமும், 8 சதவீதம் இந்தியர்களும் உள்ளனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.



source:dinmamar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails