|
|
தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் அதனை விடுத்து அச்சுறுத்தல் விடுவது அநாகரிக செயல் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. |
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஒன்றின் மூலம் விடுத்துள்ள அச்சுறுத்தல் தமக்கு ஏதுவானதல்ல என ஜெர்மனி பெர்லின் நகரில் ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தவறான புரிதல் இருக்குமாயின் அதனை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அச்சுறுத்தல்களினால் அல்ல என குறிப்பிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ மேலதிக தகவல்கள் எதனையும் அறியாமலேயே கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களையும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களான அல்-அஜெசீரா, சீ .என்.என் மற்றும் பீ.பீ.சீ ஆகியவற்றையும் நாட்டில் இருந்து வெளியேற்ற போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த ஊடக நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் வீடியோ படங்களை ஒளிபரப்புவதாகவும் ஜெர்மன் மற்றும் சுவிஸர்லாந்து தூதுவர்கள் புலிகளுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். |
No comments:
Post a Comment