|
|
நோர்வே, ஒஸ்லோவுக்கான இலங்கையின் தூதுவர் எசல வீரக்கோன் தமது இரண்டு வருடக்கால பதவி முடியும் முன்னரே, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். |
முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ஆலோசகராக செயற்பட்டதாகவும், இவரது தந்தையார் பிரட்மன் வீரக்கோன் விடுதலைப்புலிகளுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஏற்பட முயற்சி செய்ததாகவும், வன்னியில் கை-ரெக் வானொலி, தொடர்பு உதிரிப்பாகங்களை அனுப்பியதில் இவருக்கும் பங்குள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் எசல வீரக்கோனை திருப்பியழைக்கும் உத்தரவை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. |
http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b33P9EEe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dVZLuGce03g2hF0cc2tj0Cde
No comments:
Post a Comment