February 4, 2009
இன்று டென்மார்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டப் பேரணியில் சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். டென்மார்க்கின் வரலாறு காணாத பேரணியில் பேசிய பிரபல டேனிஸ் அரசியல் தலைவர் மோண்ஸ் லுக்கரொப் சிறப்புரையாற்றினார். அத்தருணம் கருத்துரைத்த அவர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராட்ட வீரர் மோண்ஸ் லுக்கரொப் புகழாரம் சூட்டினார். அத்தருணம் கரகோஷம் வானைப் பிளந்தது.
டென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இலங்கைக்கு 1948 ம் ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது பிரிட்டன் அரசு இழைத்த வரலாற்றுத் தவறு இன்று உலக வீதிகளில் தமிழரை உரிமை கோரி இறக்கியுள்ளது. குடியேற்றவாதம் தோல்வியடைந்த கதை தென்னாசியாவில் அரங்கேறுகிறது.
இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படும் அவலங்களை நிறுத்தவும், புதிய பேச்சுக்களை ஆரம்பித்து அமைதி வழியில் தீர்வு காணவும் கோரி இன்று ஐரோப்பா உட்பட உலக நாடுகள் எல்லாம் தமிழர்கள் பேரெழுச்சி கொண்டனர்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று வேலைகளை புறக்கணித்து நீதிகோரி வீதியில் இறங்கினார்கள். இதுவரை தமிழர் புலம் பெயர்ந்த 25 ஆண்டு கால வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் அணி திரண்டு போராடினார்கள். சகல நாடுகளிலும் வன்னியில் கொல்லப்படும் மக்களின் உயிர்களை காக்கும்படி மகஜர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் கொதிக்கும் வெய்யிலிலும், இங்கிலாந்தில் கொட்டும் பனியிலும் இரு முரண்பட்ட காலநிலையின் தாக்கங்களை சந்தித்து போராடினார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம் ராஜ்ஜியம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட இங்கிலாந்து விட்ட தவறு இன்று சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் போல பரவியிருக்கும் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளின் பாராளுமன்றங்கள், இந்தியத் தூதரகங்கள், சிறீலங்கா தூதராலயங்களை நோக்கி மக்கள் சாரி சாரியாக புறப்பட்டார்கள். இளையோர் இந்த ஊர்வலங்களில் முக்கிய பங்கேற்று நடாத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சுமார் 50.000 தாண்டிய மக்கள் பெரு வெள்ளம் காணப்பட்டது. டென்மார்க்கில் இதுவரை வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் திரண்டு பேரணி நடாத்தினார்கள். சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் தொகை காணப்பட்டதாக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். டென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இதுபோல இங்கிலாந்தில் சிறீலங்கா தூரகத்திற்கு முன்னால் சிறீலங்கா தேசியக் கொடி எரிப்பு இடம் பெற்றதாக ஐ.பி.சி தெரிவித்தது. கறுப்பு உடை அணிந்து பிரிட்டனில் மக்கள் அணி திரண்டிருந்தனர். அதேபோல உலகத்தின் சகல பாகங்களிலும் இந்த ஆர்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் வரலாறு காணாத உணர்வலை பொங்கிப் பிரவாகித்திருக்கிறது.
சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டன் அரசு சிறீலங்காவிற்கு சுதந்திரம் வழங்கியபோது அங்குள்ள தமிழரை அடியோடு புறக்கணித்து பாராபட்சமான சுதந்திரத்தை வழங்கிய காரணத்தால் இன்று இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது. சகல சிக்கல்களினதும் கதாநாயகனான பிரிட்டன் இன்று மௌனம் காக்கிறது. அதேபோல இந்தப் பிரச்சனையின் இன்னொரு கதாநாயகனாக இந்திய நடுவண்அரசும் தனது கடமைகளை தவறாகவே நிகழ்த்துவதாக கூறப்படுகிறது.
சர்வதேச சமுதாயம் ஒரு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல தமிழ் மக்களின் மரணத்தில் சிங்கள அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
மகிந்த கொடும்பாவி எரிக்கப்படுவதை காண வேண்டின் இங்கே அழுத்துக- டென்மார்க்
No comments:
Post a Comment