Sunday, February 1, 2009

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
 
தமிழினம் காக்க உயிர் நீத்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.
இறுதி ஊர்வல பாதை முழுவதும் திரண்ட மக்கள் மெழுகுதிரி ஏந்தி முத்துக்குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஈழத் தமிழருக்காக தனது இன்னுயிரைத் தீயிட்டு மாய்த்துக் கொண்ட "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் உடல் சென்னை கொளத்தூரில் உள்ள அவரின் சகோதரி வீட்டில் பொதுமக்களின் வணக்கத்துக்காக கடந்த இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.
 








"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை புறப்பட்டு சென்னை கொளத்தூரில் இருந்து  காகித ஆலை சாலை, பெரம்பூர் தொடருந்த நிலையம், ஸ்டீபன் சன் சாலை, இளங்கோ நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை, எருக்கஞ்சேரி, வியாசர்பாடி மேம்பாலம் வழியாக 10 கிலோ மீற்றர் தொலைவைக் கடந்து இரவு 9:00 மணிக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள இடுகாட்டை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்ததராஜன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
உட்படப் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மாணவர்கள், இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் மெழுகுதிரி ஏற்றி "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு வணக்கம் செலுத்தினர்.
 
















 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails