பாதுகாப்பு வட்டத்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை"
கோத்தபய (என்ன " பய ?") ராஸபக்ஸே
("ஷ" எனும் கம்பீரமான எழுத்தைப் பயன்படுத்த விருப்பமில்லை..!) கொக்கரிப்பு..!
ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதியில்லை;
செய்தியாளர்களுக்குத் தடை;
'நார்வே' போன்ற நடுநிலை நாடுகளை நெருங்கவிடுவதில்லை;
இன்று (03/02/2009) காலை ஒரு சில துண்டுப் படங்களை தொலைக்காட்சி செய்தியில் காண நேர்ந்து
"bed cofee"-யிலிருந்து(!?) கண்ணீருடனே எழுந்தேன்;
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனப் பாடி நம்மைத் தூண்டி விட தலைவன் இல்லாததாலோ என்னவோ தமிழன் தூங்கிக் கொண்டிருக்கிறான்;
சில மணித் துளிகள் துண்டுப் படங்களே இத்தனைக் கொடூரமாக இருக்கிறதே உண்மை நிலவரம் எத்தனை மோசமாக இருக்கும்?
இரண்டுக் கைகளும் "ஷெல்" போட்டு துண்டான பாதி உடம்புடன் இளைஞன் ஒருவன் தன் தம்பி தங்கை நிலை எண்ணிக் கதறுகிறான்;
அதே போல மூளியாகிப் போன உடலுடன் ஒரு குடும்பத் தலைவன் கதறுகிறார்;
ஒரு தாயின் வலது காலையும் இடது கையையும் காணவில்லை;
கைக்குழந்தைகளின் கையும் காலும் துண்டாகி...கொடூரம்..கொடூரம்..!
இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி அப்பாவித்தனமாகக் கேட்டாள்,"அவர்கள் எப்படியாவது இராமேஸ்வரம் வந்து இங்கே பாதுகாப்பாக இருக்கலாமே" என..!
'குடும்பங்களைப் பிரிந்து இங்கே வந்து அடிமைகளைப் போல சரியான வேலை வாய்ப்போ கல்வியோ சுதந்திரமோ இல்லாமல் கூட்டம் கூட்டமாக 'நாளை என்பது என்ன' என்று தெரியாமல் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை',என்று நான் சமாளிப்பாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அவமானப்படுத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டதாகச் செய்தி..!
எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வரும் அவனைத் தடுக்க நம்மிடம் (ரோந்துப்)படைகள் இல்லையா?
டில்லியிலிருப்போர்க்கு தென்னகத்தின் மீது அக்கறையில்லையா?
ஏற்கனவே "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற கோஷம் எழும்பி சற்று அடங்கி இருக்கிறது..,
கோஷத்தை எழுப்பியவர்கள் வாழ வாய்ப்பு கிடைத்ததால்..!
தமிழகத்திலும் ' தெற்கு வாழ்கிறது,வடக்கு தேய்கிறது ' என்ற கோஷம் அடிக்கடி எழும்பி எழும்பி மறைகிறது;
இந்த கட்டத்திலாவது மத்திய அரசு விழித்துக் கொள்ளாவிட்டால் தமிழீழம் இலங்கையில் அல்ல;
இந்தியாவில் அமையக் கேட்டுப் பிரிவினைவாதிகள் எழும்பும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது;
தமிழர்களுக்கு நேரிட்ட கொடுமைகள் சிங்களர்களுக்கு நடந்திருந்தால் இந்தியா அண்டை நாடு என்ற முறையில் என்ன செய்திருக்குமோ அதனைச் செய்தாலும் போதும்;
விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை எதிர்க்க தமது எல்லையிலிருந்து செய்த யுத்தத்தை தர்ம நியாயத்தினை மீறி எதிரியின் எல்லையில் புகுந்து நடத்தியிருந்தால் (மட்டுமே பயங்கரவாதம்,,!) இலங்கை தேசம் முழுவதுமே தமிழர் வசமாகியிருக்கும்;
"உயிர்களை பலி கொடுத்து உயிர்வாழ உரிமை கேட்கும்" அவல நிலையிலுள்ள தமிழனைக் காக்க நாளைய தினம் {04/02/2009} பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழக எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கிறது;
கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது;
சனநாயக முறையிலான இந்த உணர்வையும் குறுகிய மனப்பான்மையுடன் அரசாங்கம் தடுக்க நினைக்கிறது.
தர்மம் வெல்லுமா..?

No comments:
Post a Comment