February 2, 2009
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் கிழக்கு இங்கிலாந்தில் இன்று பனி மழை பொழிந்தது. இதன் காரணமாக லண்டனில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக லண்டனின் சில பகுதிகளில் குழப்பம் நிலவியது.
லண்டன் நகரில் இன்று அனைத்து பேருந்து போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், நிலத்துக்கு கீழே செல்லும் சில ரயில் சேவைகள் முழுமையாக இயங்கின.
இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து புறப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது காலதாமதத்துக்கு உள்ளாயின.
பிரிட்டனின் மொத்த பணியாளர்களில் கால் சதவீதம் அதாவது, சுமார் ஆறுபது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இன்று பணிக்கு வரவில்லை என்று வர்த்தக கூட்டமைப்பு ஒன்று கணித்துள்ளது.
இந்த மாதிரியான ஒரு கடுமையான கால நிலையை எதிர்கொள்ள லண்டன் நகரம் தயாரான நிலையில் இல்லை என்று நகரத்தின் மேயரான போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment