|
அங்கீகாரமற்ற ஐ.சி.எல். கிரிக்கெட்டில் மீண்டும் சேர்ந்ததால் பாகிஸ்தான் பேட்ஸ்மென் மொகமது யூசுபிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் இம்மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் போட்டித் தொடரில் யூசுஃபிற்கு பதிலாக காலித் லடிஃப் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.சி.எல். கிரிக்கெட்டில் சேர்ந்த அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது. |
No comments:
Post a Comment