தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிநடை தொடர் கிறது. கட்டாக்கில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சேவக், சச்சின், தோனி ரெய்னா அதிரடி காட்ட, இங்கி லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 5வது வெற்றியை பெற்று அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பீட்டர் சனின் சதம் வீணானது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையா டுகிறது. முதல் நான்கு போட்டியிலும் சூப்பர் ஆட்டத்தை வெளிப் படுத்திய இந்திய அணி தொடரை 4-0 என கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி, ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். காம்பிர் நீக்கம்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப் பட்டன. காம்பிர், முனாப் படேல் நீக்கப்பட்டு, ஆல்- ரவுண்டர் இர்பான் பதான், ரோகித் சர்மா சேர்க்கப் பட்டனர். இங்கிலாந்து அணியில் பெல், ஆன்டர்சனுக்கு பதிலாக குக், ஹார்மிசன் இடம் பிடித்தனர். ஜாகிர் அசத்தல்: துவக்க வீரர்களாக போபரா, குக் வந்தனர். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட குக் 11 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பீட்டர்சன் ஆட்டத்தை அதிரடியாக துவக்கினார். இர்பான் பதான் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட மொத்தம் 13 ரன்கள் எடுக்க, ரன்வேகம் எகிறியது. இந்நிலையில் சூப்பராக பந்துவீசிய ஜாகிர், இங்கிலாந்துக்கு இரண்டாவது அதிர்ச்சி கொடுத்தார். இவர் போபராவை (24) வெளியேற்றினார். பீட்டர்சன் பிரமாதம்: இந்நிலையில் களமிறங்கிய கோலிங்வுட், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் ஒரு நாள் அரங்கில் 21வது அரைசதம் பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர் ஹர்பஜன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். மறுமுனை யில் இவருக்கு கோலிங் வுட் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் கோலிங்வுட் (40) அவுட் டானார். அதிரடி பிளின் டாப் வந்த வேகத்தில் "டக்' அவுட்டாகி ஏமாற்றினார். ஷா அதிரடி: அடுத்து ஓவேஸ் ஷா வந்தார். இஷாந்த் பந்தில் வரிசை யாக இரண்டு பவுண்டரி கள் விளாசி, ஷா அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 111 (ஒரு சிக்சர், 10 பவுண்டரி), ஓவேஸ் ஷா 66 ரன்களுடன்(9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சேவக் விளாசல்: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை ஒருகை பார்த்தார் சேவக். ஹார்மிசன் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். மறுமுனையில் பிளின்டாப் பந்தில் சச்சின் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, இந்தியா முதல் 10 ஓவரில் 62 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளாசிய சேவக் சுவான் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்து, அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மொத்தம் 21 ரன்கள் கிடைத்தது. சச்சின் அரைசதம்: சிறப்பாக விளையாடிய சச்சின் ஒரு நாள் அரங்கில் 90வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தநிலையில் சச்சின் அவுட்டானார். இவர் 6 பவுண்டரிகள் உட்பட 50 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் (6) விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து சிறப் பாக விளையாடி கொண் டிருந்த சேவக்கும் அவுட் டாக, இந்திய அணிக்கு லேசான சிக்கல் ஏற்பட்டது. ஒரு சிக்சர், 15 பவுண்டரி அடித்த சேவக் 73 பந்தில் 91 ரன்கள் எடுத்து, சதம் கடக்கும் வாய்ப்பை 9 ரன்களில் நழுவவிட்டார். தோனி "50': அடுத்து வந்த ரெய்னா, கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந் தார். சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றது. அதிரடியாக விளையாடிய ரெய்னா, போபரா மற்றும் சுவான் ஓவரில் தலா 2 பவுண்டரிகள் விளாசினார். பொறுப்புடன் பேட் செய்த தோனி, சுவான் பந்தில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 25வது அரைசதமாக அமைந்தது. இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தநிலையில் தோனி (50) அவுட்டானார். ரெய்னா அசத்தல்: சிறப்பாக விளையாடிய ரெய்னா, ஒரு நாள் போட்டிகளில் 8வது அரைசதம் கடந்தார். இந்திய அணி 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரெய்னா 54, ரோகித் 8 ரன்களுடன் ஆட்டமிழக் காமல் இருந்தனர். இவ்விரு அணிகளும் மோதும் 6வது ஒரு நாள் போட்டி வரும் 29ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. சச்சின் "125": இங்கிலாந்து வீரர் குக்கை "கேட்ச்' பிடித்து வெளியேற்றிய சச்சின், ஒரு நாள் போட்டிகளில் 125வது "கேட்ச்' பிடித்த 6வது வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக இந்தியாவின் அசார் (156), இலங்கையின் ஜெயவர்தனா (153), ஆஸ்திரேலி யாவின் பாண்டிங் (135), நியூசிலாந்தின் பிளமிங் (132), ஆஸ்திரேலியாவின் பார்டர் (127) ஆகியோர் இம்மைல்கல்லை கடந்துள்ளனர். இந்தியா முதலிடம்: நேற்று இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி இந்தாண்டில் தனது 19வது வெற்றியை ருசித்துள்ளது. இதன்மூலம் இந்தாண்டு அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானிடம்(18) இருந்து தட்டிச் சென்றது. இந்தியா 2008ல் 29 போட்டியில் பங்கேற்று 19 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் ஆதிக்கம்: சேவக் 91 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தாண்டு ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை சகவீரர் யுவராஜுடன்(893) பகிர்ந்து கொண்டார். முதல் இரண்டு இடங்களில் காம்பிர்(1119), தோனி (1097)இருக்கின்றனர். மொத்தத்தில் "டாப்-4' இடங்களையும் இந்தியா கைப்பற்றி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துகிறது. |
Wednesday, November 26, 2008
கட்டாக்கில் இந்தியா கலக்கல் வெற்றி! : வீணானது பீட்டர்சன் சதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment