- பெய்ஜிங்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தை நிலநடுக்கம் உலுக்கி 6 மாதங்கள் ஆகின்றன.
அந்த நிலநடுக்கத்தில் எத்தனை பள்ளிக் குழந்தைகள் இறந்தனர் என்பது பற்றிய விவரத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இப்போது முதன் முறையாக அரசாங்கம் அந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது பள்ளிக்கூடங்கள் இடிந்து விழுந்ததில் 19,000 மாணவர்கள் உயிரிழந்ததாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிச்சுவான் மாநிலத்தை 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியபோது 80,000 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையில் கால்வாசியினர் பள்ளி மாணவர்கள் என்று இப்போது அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை என்று சிச்சுவான் மாநில துணை ஆளுநர் வெய் ஹோங் கூறினார்.
பள்ளிக்கூடக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட 19,000 பேரில் ஆசிரியர்களும் அடங்குவார்களா, அல்லது மாணவர்கள் மட்டுமா என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. நிலநடுக்கத்தின்போது இடிந்துவிழுந்த பள்ளிக்கூடங்கள் முன்னதாக அந்த நிலநடுக்கத்தில் 10,000-க்கும் குறைவான மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் தகவல் கூறியது.
நிலநடுக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் மறுநிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் 440 பில்லியன் யுஎஸ் டாலர் செலவு செய்யவிருப்பதாக சிச்சுவான் மாநில துணை ஆளுநர் வெய் ஹோங் கூறினார்.
அடுத்த ஈராண்டுகளுக்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சிச்சுவான் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்ப நாள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
Saturday, November 22, 2008
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 19,000 மாணவர்கள் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment