Thursday, November 20, 2008

பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்போம்: புதிய அதிபர் ஒபாமா சபதம்

lankasri.comஅமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அபார வெற்றி பெற்றார்.அவர் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.

ஒபாமாவுக்கு பின்லேடனின் அல் கொய்தா தீவிரவாதிகளால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஒபாமா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அல்கொய்தா தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்துக் கட்டுவோம்.இதுவே எனது முதல் கடமை.அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடனை உயிருடன் பிடிப்போம்.முடியாவிட்டால் அவனை கொன்று பிணமாக பிடிப்போம்.இது மிகவும் கஷ்டமான காரியம்தான்.ஆனால் இதுவே எனது முதல்நிலை.அமெரிக்காவுக்கு எப்போதுமே ஆபத்தான பின்லேடனை விட்டு வைக்க மாட்டேன்.

அமெரிக்காவை எதிர் நோக்கியுள்ள பொருளாதார சிக்கல் எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது.அந்த பொருளாதார சிக்கலை தீர்க்க முன்னுரிமை கொடுத்து இன்னும் 2மாதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

இந்த நிலையில் ஒபாமா நேற்று அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேனை சந்தித்து பேசினார்.

சிகா கோவில் ஒபாமா வின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.எதிரும் புதிருமான அந்த இருவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பொருளாதார பிரச்சினை,நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.சிரித்து சிரித்து பேசி அவர்கள் அரசியல் நாகரீத்தை நிலை நாட்டினார்கள்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226996283&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails