கிளிநொச்சி, நவ. 17-
ஈழத் தமிழர்களுக்கு எந்தவித அடிப்படை உரிமைகளையும் கொடுக்க மறுக்கும் இலங்கை அரசு, தன் ராணுவம் மூலம் விடுதலைப்புலி களை அடக்கி விட்டு, தமிழர்களை அடிமை ஆக்கி விடலாம் என்ற எண் ணத்தில் உச்சக்கட்டப் போரை நடத்தி வருகிறது.
இதற்காக முப்படை களையும் சிங்கள ராணுவம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் விடுதலைப்புலிகள் கொரில்லா தாக்குதல் தந்திரத்தை கடை பிடிக்கின்றனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளின் அதிரடிகளை சிங்கள ராணுவம் சமாளிக்க திணறியது. கடந்த சில ஆண்டுகளாக நவீன ஆயுதங்கள், வெளிநாட்டுப்பயிற்சி போன்றவை காரணமாக இலங்கை ராணுவம் புது தெம்பை பெற்றுள்ளது.
சிங்கள தரைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பீரங்கிகளால் தாக்கியும், விமானங்களில் இருந்து குண்டு போட்டும், தமிழர்களின் கிராமங்களை அழிக்கும் மிக கொடூரத்தாக்குதல்களை கையாண்டு வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் நடந்து வரும் போர் புதியவடிவத்தை பெற்றுள்ளது.
கருணா செய்த இனத்துரோகம் காரணமாக ஈழத்தின் கிழக்கு பகுதியை விடுதலைப் புலிகள் இழந்தனர். இதனால் உற்சாகம் அடைந்த இலங்கை அரசு வடக்குப் பகுதியையும் இந்த ஆண்டுக்குள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு ராணுவத்தை நகர்த்தி வருகிறது. இலங்கை ராணுவத்தின் அதிரடிப் படையும் 58-வது படை பிரிவும் மேற்கு கடலோரம் முழுவதையும் கடந்த வாரம் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்த 2 படைகளும் சேர்ந்து கடந்த வாரம் விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்தளமான பூநகரியை பிடித்தன. இதை தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக சிங்களர்கள் வெடி வெடித் துக் கொண்டாடி வருகிறார் கள்.
வரும் 26-ந் தேதி விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். இதை யொட்டி அவர் மாவீரர்கள் தின உரை நிகழ்த்துவார். அதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்று சிங்கள ராணுவம் தாக்குதலை தீவி ரப்படுத்தி உள்ளது.
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை எளிதில் நெருங்க முடியாது என்று இலங்கை ராணுவத்துக்கு நன்கு தெரியும். எனவேகிளி நொச்சியை சுற்றி உள்ள நகரங்கள் அனைத்தையும் தங் கள் பிடிக்குள், கொண்டு வந்து, அங்கு தங்களை வலுவாக நிலை நிறுத்திக் கொள்ள சிங்கள ராணுவம் நினைக்கிறது. இதற்காக கிளிநொச்சி நகரை நோக்கி 2 முனைகளில் திட்டமிட்டு இலங்கை ராணுவம் கடந்த 3 தினங்களாக தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது.
இதில் ஒரு முனை பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கி செல்லும் மேற்கு பகுதியாகும். மற்றொன்று வடக்குப் பகுதியில் உள்ள முகமாலை பகுதியாகும். மேற்கு முனையில் இலங்கை ராணுவத்தின் 58-வதுப் பிரிவும், வடக்கு முனையில் 53 மற்றும் 55-வது படைப்பிரிவும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு முகமாலை கண்டல் பகுதியில் 55-வதுப்படைப் பிரிவினர் பீரங்கி மற்றும் விமான தாக்குதல்களை நடத்திய படி முன்னேறத் தொடங்கினார்கள். அதே சமயத்தில் முகமாலை, கிளாலி புறநகரை குறி வைத்து 53-வதுப் படை பிரிவு தாக்குதல் நடத்தியபடி முன்னேறியது. இந்த 2 பகுதிகளிலும் நேற்று காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கடும் சண்டை நடந்தது.
விடுதலைப்புலிகள் அதி நவீன பீரங்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர். இதை சமாளிக்க முடியாமல் சிங்கள ராணுவ வீரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி அடித்த விடுதலைப்புலிகள் பதிலடி தாக்குதலையும் தீவிரப் படுத்தினர்கள்.
நேற்று மதியம் 2 மணிக்கே இந்த சண்டை ஓய்ந்தது. இதில் கண்டல் பகுதியில் 15 வீரர்களும், முகமாலை, கிளாலி பகுதியில் 10 வீரர்களும் கொல்லப்பட்டனர். சுமார் 80 சிங்கள வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர்களில் 4 தடவை ஏற்றி சென்றனர்.
சிங்கள ராணுவத்தின் முன் நகர்வை முறியடித்த விடுதலைப்புலிகள் முக மாலை முகாமுக்கு கூடுதல் போராளிகளை அனுப்பி உள்ளனர். கிளாலி, கண்டல், பாளை இயேக்கச்சி, மற்றும் கிழக்கு வடமாரட்சி ஆகிய இடங்களில் கூடுதல் போராளிகள் குவிக்கப்பட் டுள்ளனர். சிங்கள ராணுவம் வடமுனை வழியாக ஊடுருவக் கூடாது என்பதில் விடுதலைப்புலிகள் தீவிர மாக உள்ளனர்.
இதற்கிடையே பூநகரியை கைப்பற்றியது போல கிளிநொச்சிக்கு மிக அருகில் இருக்கும் பரந்தனை பிடிக்க சிங்கள ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பரந்தன் நகரம் கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையில் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கிளி நொச்சிக்கும் முகமாலைக்கும் இடையில் உள்ளது.
முகமாலையை வீழ்த்தி அதன் பிறகுயானை இறவை மீட்டால் தான் சிங்கள ராணுவத்தால் பரந்தன் பக்கம் வரமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு "ஓயாத அலைகள்'' எனும் போர் மூலம் யானை இறவை கைப்பற்றிய விடுதலைப்புலிகள் தற்போது அங்கு மிக, மிக வலுவாக உள்ளனர். எனவே சிங்கள ராணுவம் மேலும் முன்னேறதுணிந்தால், அவர்கள் நிறைய உயிரிழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே பூநகரியை கைவிட்டது போர் தந்திரம் தான். அடுத்த 3 மாதத்தில் சிங்கள படைகளுக்கு விடுத லைப் புலிகள் மரண அடி கொடுப்பார்கள் என்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment