|
நாக்பூர் டெஸ்டில் சற்று முன் ஆஸ்ட்ரேலிய அணியை இந்தியா 172-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியதோடு,பார்டர்-கவாஸ்கர் கோப்பையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.ஆஸ்ட்ரேலியா 209-ரன்களுக்கு சுருண்டது. 2005ஆஷஸ் தொடருக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியைக் கூட வெல்லாமல் ஆஸ்ட்ரேலியா படுதோல்வி அடைந்துள்ளது.மேலும் கடந்த சிட்னி டெஸ்டிற்கு பிறகு இந்தியாவுடன் விளையாடிய 6டெஸ்ட்களில் இந்தியா 3டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இன்று காலை 13/0 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலியா,இலக்கை எட்டுமாறு அடித்து ஆட வேண்டும் என்ற அறிவுபூர்வமான முடிவை எடுத்தது. அதற்கு இணங்க ஹெய்டன் அதிரடியாக விளையாடிஅனர்.ஆனால் அவர் 77ரன்களில் ஆட்டமிழந்த பிறகு,முன்னதாக பாண்டிங்கும்,கிளார்க்கும் கூட போன பிறகு வெற்றி பெறுவது சாத்தியமில்லாது போய் விட்டது. இந்திய அணியில் ஹர்பஜன் சிங் 4விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா 3விக்கெட்டுகளையும்,இஷாந்த் ஷர்மா 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கடைசியாக மிட்செல் ஜான்சன் ஹர்பஜன் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆன போது இந்திய அணியினர் ஸ்டம்புகளை தரையிலிருந்து எடுத்து கொண்டாட்டத்தை துவங்கினர். ஆட்டத்தின் கடைசி ஒரு சில ஓவர்களை கங்கூலி தலைமையின் கீழ் ஆடுமாறு செய்தார் தோனி.கங்கூலியின் கடைசி டெஸ்ட் தினம் இது என்பதால் தோனி அவ்வாறு முடிவு செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆட்ட நாயகனாக கிரேஜாவும்,தொடர் நாயகனாக 15 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226310504&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment