"உலக கிரிக்கெட் அரங்கில் கும்ளே மிகச் சிறந்த வீரர்.போராட்டக் குணம் கொண்ட அவரது ஓய்வு, இந்தியாவுக்கு இழப்பு" என்கிறார் மிஸ்பா உல் ஹாக்.இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே. சமீபத்தில் டில்லியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன்,தனது 18ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் மிஸ்பா உல் ஹாக் கூறுகையில்,"கும்ளே ஓய்வு அறிவிப்பு,இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.ஆடுகளத்தில் போராட்டக் குணம் கொண்டவர் கும்ளே.விளையாட்டின் மீது அவருக்குள்ள உண்மையான ஈடுபாடு,அவரை மரியாதைக்குரிய இடத்தில் வைத்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையிலேயே அவர் ஓய்வை அறிவித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இருப்பினும் ஒரு சீனியர் வீரரான கும்ளேவுக்கு,எப்பொழுது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்" என்றார். சரியான முடிவு:கும்ளேவின் ஓய்வு குறித்து பாகிஸ்தானின் அப்ரிதி கூறியதாவது:கும்ளேவின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.ஆனால் கும்ளே சரியான நேரத்தில் தான் ஓய்வை அறிவித்திருக்கிறார்.உயர்வும்,மதிப்பும் இருக்கும் போதே கும்ளே ஓய்வு முடிவை அறிவித்தது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அப்ரிதி கூறினார். | |
|
Wednesday, November 5, 2008
கும்ளே சிறந்த வீரர்:மிஸ்பா புகழாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment