|
ஐ.பி.எல்.(இந்தியன் பிரீமியர் லீக்) 20ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு மிகவும் வெற்றி கரமாக நடந்தது.இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அனைத்து நாட்டு சர்வதேச வீரர்களும் இதில் ஆடியதால் ரசிகர்கள் இதை வெகுவாக ரசித்தனர். ஏலம் முறையில் எடுக்கப்பட்டதால் வீரர்களுக்கும் இந்தப் போட்டியில் பணம் கொழித்தது. இலங்கை அணியில் ஜெயசூர்யா,ஜெயவர்த்தனே,சங்ககரா போன்ற முன்னணி வீரர்கள் உள்பட பெரும்பாலானோர் ஆடுகிறார்கள்.அடுத்த ஆண்டு போட்டி நடைபெறும் நேரத்தில் இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஐ.பி.எல்.போட்டியில் ஆட வேண்டி இருப்பதால் பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைக்குமாறு கேட்டனர்.இதை தொடர்ந்து இங்கிலாந்து பயணத்தை இலங்கை கிரிக் கெட் வாரியம் ரத்து செய்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். அமைப்பின் மீது இலங்கை கிரிக்கெட் வாரிய சேர்மனும்,முன்னாள் கேப்டனுமான அர்ஜுனா ரணதுங்கா பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஐ.பி.எல்.அமைப்பில் இலங்கை சீனியர் வீரர்கள் பலர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.அவர்கள் விளையாட முடியாததால் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தோம்.இதனால் எங்களுக்கு ரூ.15கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் டெலிவிசன் உரிமம் மட்டும் ரூ.10கோடி கிடைக்கும். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐ.பி.எல்.போட்டியில் வீரர்கள் ஆடுவதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை.எங்கள் கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.வீரர்களுக்கு நாங்கள் அதிகமாகத்தான் பணம் கொடுக்கிறோம்.ஐ.பி.எல்.எங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1225536518&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment