|
|
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள கணினிகளை சீனாவைச் சேர்ந்த இணையதளக் குற்றவாளிகள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இணையதள இணைப்பு மூலம் வெள்ளை மாளிகை கணினிகளில் உள்ள பல்வேறு தகவல்களை அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும்,அரசு அதிகாரிகள் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களையும் அவர்கள் திருடியுள்ளனர். இதனிடையே,இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பது சற்று கடினம் என்று மென்பொருள் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "தி பைனான்சியல் டைம்ஸ்"உள்ளிட்ட பல்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226246958&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment