இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் 200 சிங்கள வீரர்கள் பலியானதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் முக்கிய இடமான கிளிநொச்சியை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுமையிட்டுள்ளது. இதற்காக 3 முனைகளில் இருந்து சிங்கள ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் முகமாலை வழியாக முன்னேறி வந்த சிங்கள படையை விடுதலைப்புலிகள் அதிரடியாக தாக்கினார்கள். இதில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை காலை வரை நடந்த சண்டையில் 36 சிங்கள வீரர்கள் பலியானார்கள்.
90 பேர் காயம் அடைந்தனர். அதற்கு முந்தைய நாள் சண்டையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்படடனர்.
இதேபோல மாங்குளம் என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்து வருகிறது. கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட செய்தியிலும் 3 நாள் போரில் 200 வீரர்கள் இறந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட இலங்கை பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெரியவில்லை.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=384
No comments:
Post a Comment