பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது என்ற உலக நாடுகளின் எச்சரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐ இருப்பதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தனது குற்றச்சாட்டு குறித்த வலுவான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது. எனினும், இந்தியாவின் குற்றச்சாட்டையும்,எச்சரிக்கையையும் பாகிஸ்தான் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை. தற்போது மும்பை நட்சத்திர ஹோட்டல்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பிருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது.இதனை கருத்தில் கொண்டே அந்நாட்டு உளவு அமைப்பினரை இந்தியாவுக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது. முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐஎஸ்ஐ தலைவரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்த பாகிஸ்தான்,பின்னர் பின்வாங்கிவிட்டது.ஐஎஸ்ஐ சார்பாக பிரநிதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டின் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாகவும் அரசியல் நோக்கர் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இந்தியாவைப்போலவே அமெரிக்காவும் ஐஎஸ்ஐ-க்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் வந்த அமெரிக்க புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் சம்பவத்திலும் ஐஎஸ்ஐ அமைப்பினரின் தொடர்பு குறித்த ஆதாரங்களையும் அவர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் அளித்தார். எனினும்,பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுக்கும் எச்சரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை.பாகிஸ்தானின் இந்தப் போக்கை கவனிக்கும் உலக நாடுகள் ஐஎஸ்ஐ மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் திறமை அந்நாட்டு அரசுக்கு இல்லை என்றே கருதுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228035398&archive=&start_from=&ucat=1& |
Sunday, November 30, 2008
தீவிரவாதிகளுடன் ஐஎஸ்ஐக்கு தொடர்பு:"உலக நாடுகளின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment