கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடுதலைப்புலிகளின் இரு நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். பரந்தன் சந்திக்கு மேற்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடற்புலிகளின் கட்டளை நிலையம் மீதும் பூநகரிக்கு தென் கிழக்கே சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள புலிகளின் ஆட்லறி நிலைகள் மீதுமே இந்த விமானத் தாக்குதல்கள் நடைபெற்றதாக விமானப் படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். பிற்பகல் 12.50 மணியளவில் இரு இலக்குகள் மீதும் ஒரே நேரத்தில் துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபடும் படையினருக்கு ஆதரவாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறினார். இதேநேரம், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியிலும் கிளிநொச்சியில் அக்கராயன்கும் பகுதியிலும் மணலாறில் ஆண்டான்குளம் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
Monday, November 10, 2008
கிளிநொச்சியில் இரு இடங்களில் கடுமையான விமானத் தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment