ஜப்பானில் நிலநடுக்கம் |
ஜப்பான் நாட்டின் முக்கியத் தீவான ஹான்ஷுவில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. இதனால் உயிரிழப்பு,பொருள்சேதம் ஏற்பட்டது குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்கிழக்கில் 375 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோங்கா,ஃபிஜி: பஸிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா,ஃபிஜி ஆகிய நாடுகளிலும் சனிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1228036399&archive=&start_from=&ucat=1& |
Sunday, November 30, 2008
ஜப்பானில் நிலநடுக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment