|
|
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமான சதீஸ்காரில் வருகிற 14ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.இங்கு பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நடக்கிறது.வேட்பாளர்களும்,கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்து இருந்தனர் இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பிரசார பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தந்தே வாடா மாவட்ட பாரதீய ஜனதா துணை தலைவர் ரமேஷ்சிங் ரத்தோர்,வட்டார பாரதீய ஜனதா தலைவர் சூரியபிரசாத் சவுகான் ஆகியோர் அங்குள்ள கிராம பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். பண்ட குண்டாரா என்ற இடத்தில் அவர்கள் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் அங்கு திடீரென வந்தனர்.பொது மக்கள் முன்னிலையிலேயே தலைவர்கள் 2பேரையும் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது. தலைவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாக போலீசார் வந்திருந்தனர்.ஆனால் நக்சலைட்டுகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.பின்னர் நக்சலைட்டுகள் அவர்கள் வந்த காருக்கு தீவைத்து விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை பார்த்து பீதியடைந்த மக்கள் ஊரை விட்டு ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் படை விரைந்தது.கொலை நடந்த இடம் ஆந்திர மற்றும் மராட்டிய மாநிலம் எல்லையில் உள்ளது.எனவே எல்லையை சீல் வைத்து நக்சலைட்டுகளை தேடி வருகிறார்கள். |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226306586&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment