|
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் இன்று டெஸ்ட் போட்டிகளில் 40-வது சதத்தை அடித்து மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் டோனி,டாசில் வெற்றி பெற்று இந்தியா முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.இதனையடுத்து இந்தியா முதலில் பேட் செய்ய தொடங்கியது. ஒரு போட்டியில் ஆட துவக்க வீரர் கவுதம் காம்பீருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அவர் இந்த டெஸ்ட்டுக்கான அணியில் இடம் பெறவில்லை.அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் விஜய்,ஷேவாக்கோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். விஜய் மற்றும் ஷேவாக் ஆடி வருகின்றனர்.6-வது ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 32ரன்கள் எடுத்திருந்தது.தொடர்ந்து ஷேவாக் அதிரடியாக ஆடினார்.விஜய் அவருக்கு துணை நின்றார்.விஜய் 33ரன்னில் ஆட்டமிழந்தார்.ஷேவாக் 66ரன் எடுத்து அவுட்டானார். திராவிட் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கரும்,வி.வி.எஸ்.லஷ்மணனும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.64ரன்கள் எடுத்திருந்த போது லஷ்மண் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்தார்.166 பந்துகளில் 11பவுண்டரிகளை விளாசி அவர் சதமடித்தார்.இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 10-வது சதமாகும். உலகிலேயே அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 36சதங்களுடன் 2-ம் இடத்தில் இருக்கிறார். டெண்டுல்கர் சதமடித்ததை தொடர்ந்து இந்தியா 4விக்கெட் இழப்புக்கு 282ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. |
No comments:
Post a Comment