Monday, November 10, 2008

ஒபாமா கொண்டுவர நினைக்கும் உலகளாவிய மாற்றங்கள் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

-ஜிம் லோப்-

ஜனாதிபதி பராக் ஹூஸெயின் ஒபாமா அமெரிக்காவின் வித்தியாசமான முகத்தை உலக நாடுகளுக்கு காண்பிக்க இருக்கும் அதேவேளை, அவர் கடைப்பிடிக்க இருக்கும் உண்மையான வெளிநாட்டு கொள்கை எவ்வளவுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருபுறம் ஏற்கனவே பதவியிலிருக்கும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தனிச்சையான, இராணுவ அணுகுமுறைக்கு மாறாக நீண்டகால அமெரிக்க பகைமை நாடுகள் உட்பட உலக நாடுகளுடன் பல்தரப்பட்டதும் இராஜதந்திர ரீதியிலானதுமான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை ஒபாமா அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

மறுபுறம் பால்கன்ஸ், சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தவிர்ப்புக் கொள்கை, அயல் அரபு நாடுகளுடான பேச்சுவார்த்தைகளின் போது விட்டுக் கொடுக்கும் கொள்கையை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துவதில் காண்பிக்கப்பட்ட தயக்கம் மற்றும் அதனை அடுத்து 8 வருட காலத்திற்கான அத்திவாரத்தை இடுவதற்கு அமெரிக்காவே பெரிதும் உதவியது என்ற எண்ணம் ஆகியன உட்பட தனது சொந்த தாராள தலையீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்த ஜனாதிபதி பில் கிளின்டனின் நிருவாகத்தில் ஊறிப்போனவர்களே ஜனாதிபதி புஷ்ஷின் ஆலோசர்களாக இருக்கிறார்கள்.

நிருவாகத்தில் இன்னமும் கிளின்டனின் குணாம்சங்கள் நிறைய உள்ளன என்று புதிய அமெரிக்க மன்றம் என்ற அமைப்பின் அமெரிக்க உத்தித் திட்டப் பிரிவின் தலைவரான ஸ்டீபன் கிளெமன்ஸ் தெரிவித்தார். கிளின்டனின் முன்னாள் சிரேஷ்ட உதவியாளரான ராஹ்ம் இமானுவேல் என்பவரை ஒபாமாவின் நிருவாகத்தில் வெள்ளை மாளிகை பிரதம அதிகாரியாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை "கிளின்டன்3' நிருவாகம் புனர் ஜன்மம் எடுப்பதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாக ஸ்டீபன் சுட்டிக் காட்டினார்.

சிறு பராயத்தின் பெரும்பாலான காலத்தை இந்தோனேசியாவிலும் மிகுதித் காலத்தை அமெரிக்காவின் பல்கலாசார மாநிலமான ஹாவாயிலும் கழித்த, கென்ய தந்தை ஒருவரின் ஈரின புதல்வரான ஒபாமா தற்போதைய அல்லது வேறெந்தவொரு ஜனாதிபதியிலும் பார்க்க மிக வித்தியாசமான அமெரிக்காவை உலக நாடுகளுக்கு தெளிவாக அறிமுகம் செய்வாரென்பதில் எதுவித சந்தேகமுமில்லை. அவரது பின்னணியும் உடல் தோற்றமும் ஒருபுறமிருக்க, அவரது மொழியாள்கைத்திறன், கொந்தளிப்பான நிலைமையின் போது அவர் கடைப்பிடிக்கும் மன அமைதி, சிந்தனையில் புத்திக் கூர்மை, விடயங்களை அறியத் துடிக்கும் ஆர்வம் ஆகியனவும் புஷ்ஷ?க்கு மிகவும் மாறானவையே.

கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் மூலதனம் படு மோசமாக சீரழிந்துள்ளதால் ஒபாமா மிக வேறுபாடான அமெரிக்கா ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வது அத்தியாவசிமானதொன்றாகும் என்று லீஹை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ராஜ் மேனன் தெரிவித்தார்.

ஆனால், பல உலக நாடுகளும் அவருக்கு வாக்களித்த பெரும் தொகை வாக்காளர்களும் எதிர்பார்க்கும் பாரிய மாற்றங்களை உறுதிப்படுத்த பிரசாரத்தின் போது அவர் அளித்த வெளிநாட்டுக் கொள்கை வாக்குறுதிகள் போதியதாக இல்லை என்று கருதப்படுகின்றது.

குவாந்தனாமோ தடுப்பு முகாமை மூடுவது, பூமி வெப்பமடைவதற்கு காரணமாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்து கொள்வது, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது போன்ற ஜனநாயக நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் உற்சாகம் தரும் உறுதிமொழிகளை ஒபாமா குறுகிய காலத்திற்குள் நிச்சியம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.

ஆனால், காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும் விரிவான பரிசோதனைத் தடை உடன்படிக்கை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான ரோம உடன்படிக்கை ஆகியவற்றை அங்கீகரித்தல் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும் சுற்றாடல் பிரமாணங்களையும் பலப்படுத்துவதற்காக வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை திருத்தியமைத்தல் போன்ற ஈரிடை ஆதரவைத் தேவைப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அரசியல் மூலதனத்தை செலவிட ஒபாமா அதிகம் விரும்பாதிருக்கலாம்.

பெரும் நாணய நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில். ஒபாமா இரண்டு மாதங்களுக்கு முன்னர் எண்ணியது போல் வெளிநாட்டுக் கொள்கையில் கவனம் செலுத்த அதிக நேரத்தை செலவிடுவார் போலத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் ஈராக் யுத்தம் அல்லது பயங்கரவாதம் ஆகியவற்றிலும் பார்க்க பொருளாதாரப் பிரச்சினைகளே முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருத்துத் தெரிவித்தமை கூடுதலான வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானங்களை தமது உதவி ஜனாதிபதியான செனெற் வெளியுறவுக் குழுத் தலைவர் ஜேசேப் பிடெநிடமும் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் உதவியாளர்களிடமும் விட்டுவிடலாமென கருதப்படுகிறது.

அநேகமான உதவியாளர்கள் உலகினை ஒரு யுத்தகளமாக நோக்கும் தாராள தலையீட்டுக்காரர்களை காப்பாற்றும் முயற்சிலிருந்து அநேகமாக முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவலைப் போன்ற இராணுவத் தலையீட்டை விரும்பும் புஷ்ஷை சுற்றியுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களைப் போன்றோரே ஆவர். செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் நிதி நெருக்கடி தோன்றியதிலிருந்து தேர்தல் பிரசாரத்திலிருந்து வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படாததால் ஒபாமாவின் நிலைப்பாடும் இந்த விடயத்தில் எவ்வாறிருக்கிறது என்பது பல அவதானிகளுக்கு தெளிவாக இல்லை.

ஒபாமா ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதே பலரது ஊகமாகும். பிடென் போன்ற தலையீட்டுக்காரர்களுடன் முரண்பாடில்லாத அதேவேளை சூடானில் இனக் கொலையை நிறுத்துவதற்கு அவசியமேற்பட்டால் டர்பூர் பிரதேசத்திற்கு மேலாக விமானங்களை பறக்காத வலயம் ஒன்றை பிரகடனப்படுத்துவதை ஒபாமா அங்கீகரித்துள்ளார். பகைவர்களை அவர்களது மனித உரிமை பேணல் வரலாற்றை பொருட்படுத்தாமல் இராஜதந்திர ரீதியில் அவர்களை ஈடுபடுத்துவது ஒபாமாவின் யதார்த்தவாதத்தையே பிரதிபலிக்கிறது. உண்மையில், அவரது நியமனங்களில் இரண்டு துருவங்களுக்கிமிடையே சமதன்மையை ஏற்படுத்த அவர் முயற்சிக்கலாம்.

இவ்வாறாக, பென்டகன் தலைமைப் பதவிக்கான அவரது முதலாவது தேர்வு குடியரசுக் கட்சி ஆட்சியில் பதவி வகித்த றொபேட் கேற்ஸ் ஆவார் என்று நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேற்ஸ் நிருவாகத்தில் இணைந்து கொண்டதிலிருந்து கொலின் பவலின் பதவிக்கு நியமிக்கப்பட்ட கொன்டோலிஸா றைஸுடன் சேர்ந்து அமெரிக்க கொள்கையை முன்னெடுத்து சென்ற பெருமையை பெற்றிருந்தார்.

16 மாத கால நேர அட்டவணையில் ஈராக்கிலிருந்து சகல போர்ப் படையினரையும் வாபஸ் பெறுவது, புது வகையான அணுவாயுதங்களின் உற்பத்தியை தடை செய்வது போன்ற ஒபாமாவின் தேர்தல் பிரசார உறுதிமொழிகள் பலவற்றுக்கு கேற்ஸ் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த போதிலும் அவரது தகுதி, அனுபவம் மற்றும் ஒபாமாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பை வழங்குவது ஆகியவற்றைப் பொறுத்த வரையில் விரும்பத்தக்கவராகவே கணிக்கப்படுகிறார்.

மேலும், ஒபாமா கேற்ஸை விரும்பாவிட்டால் அல்லது கேற்ஸ் ஒபாமாவின் நியமனத்தை ஏற்றுக் கொள்ளவிட்டால் மற்றுமொரு குடியரசுக் கட்சி யதார்த்தவாதியை இராஜாங்க செயலாளராகவும் கிளின்டனின் முன்னாள் கடற்படை செயலாளர் றிச்சாட் டன்சிக் என்பவரை பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்க ஒபாமா தயங்க மாட்டார். இன்டியானா மாநிலத்தின் சிரேஷ்ட செனற் வெளியுறவுக் குழு உறுப்பினர் றிச்சட் லூக, பதவியிலிருந்து வெளியேறும் நெப்ராஸ்கா மூதவை உறுப்பினர் சூக் ஹேகல், அமெரிக்காவின் ஐரோப்பிய படைப்பிரிவின் தலைவரும் தேர்தலின்போது மெக்கெயினுக்காக பிரசாரம் செய்தவருமான ஜெனரல் ஜேம்ஸ் அல். ஜோன்ஸ் ஆகிய மூவரும் இதுவரை ஒபாமாவின் நியமனங்களில் இடம்பெறுவார்களென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரும் அரபு இஸ்ரேல் பிரச்சினைக்கு தீரவு காண்பதில் நடுநிலையாக செயற்படுவோர் என்றும் ஈரான் விவகாரத்தில் தற்போதைய நிருவாகத்திலும் பார்க்க மோதல் தவிர்ப்பு மனப்பான்மையை கொண்டவர்கள் என்றும் உறுதியான யதார்த்தவாதிகளென்றும் நம்பப்படுகிறார்கள்.

இதேவேளை, கேற்ஸ் பென்டகன் தலைவராக தொடர்ந்து இருந்தால் இராஜாங்க செயலாளராக ஒரு ஜனநாயக கட்சிக்காரரை ஒபாமா தெரிவு செய்யலாம். மேற்குறிப்பிட்ட மூன்று குடியரசுக்கட்சி உறுப்பினர்களைத் தவிர அதிகமாக அடிபடும் பெயர்களாவன கூடுதலாக லிபரல் கட்சியை சார்பவரும் 2004 ஆம் வருட ஜனாதிபதி வேட்பாளருமான செனற்றர் ஜோன் கெறி, கிளின்டனின் முன்னாள் நியூ மெக்ஸிகோ மாநில ஆளுநர் பில் றிச்சாட்ஸன் ஆகியோராவர். அமெரிக்க எதிரிகளுக்கெதிராக போராடும் இவரது ஆர்வம் இவரை ஒரு யதார்த்தவாதியாக்கியுள்ளது. கிளின்டனின் மற்றுமொரு முன்னாள் ஐக்கிய நாடுகள் தூதுவர் றிச்சாட் ஹோல்புறுக்கும் ஒபாமாவின் பட்டியலில் இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக ஒபாமாவின் செல்வாக்கை பெறத் தவறியுள்ளார்.

கிளின்டனின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவரும் தலையீட்டுக்காரர்களின் பக்கம் சாய்பவராகவும் கணிக்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்டீன்பேர்க் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படலாமென கருதப்படுகிறது. கிளின்டனின் முன்னாள் அட்டோர்னியும் ஜனநாயகக் கட்சி யதார்த்தவாதியும் கிறெக் கிறேய்க் பிரதி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படலாம்.

கிளின்டனின் முன்னாள் ஆபிரிக்க உதவியாளரும் லிபரல் கட்சி யதார்த்தவாதியுமான சுசான் றைஸ் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியையும் ஐக்கிய நாடுகள் தூதுவர் பதவியையும் பெறக் கூடுமென நம்பப்படுகிறது. கிளின்டனிடம் பதவி வகிக்காதவர்களும் ஒபாமாவின் நெருங்கிய வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களுமான டெனிஸ் மெக்டொனோ, ஜெனரல் ஸ்கொட் கிறேஷன், பேச்சு எழுத்தாளர் பென் றோட்ஸ் ஆகிய மூவரும் வெள்ளை மாளிகைப் பதவிகளைப பெறலாமென நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஈராக், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து பேக்கர் ஹமில்டன் அறிக்கையை தயாரித்த இணை எழுத்தாளர் கிறேஷன் ஒரு யதார்த்தவாதியாவார்.

ஐ.பி.எஸ்.

http://www.thinakkural.com/news/2008/11/10/articles_page61607.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails