|
இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன்,"டாஸ்" வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.தொடக்க வீரர்களாக ஷேவாக்கும்,காம்பீரும் களம் இறங்கினார்கள்.இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.இருவருமே அதிரடியாக விளையாடினார்கள். ஒரு ஓவருக்கு 6ரன் வீதம் எடுக்கப்பட்டது.இதனால் 16.2-வது ஓவரில் இந்திய அணி 100ரன்னை தொட்டது. ஷேவாக் 44பந்தில் 2சிக்சர்,6பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.இது அவரது 30-வது அரை சதம்.காம்பீர் 59பந்தில் 8பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.12-வது முறையாக அரை சதம் எடுத்தார். 19.5-வது ஓவரில் ஸ்கோர் 127ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது.காம்பீர் 51ரன்னில் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து ரெய்னா களம் வந்தார். ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்,85 ரன்னில்"அவுட்"ஆனார்.73பந்தில் 10பவுண்டரி 3சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.அப்போது ஸ்கோர் 153ஆக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன்,யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியது.குறிப்பாக யுவராஜ் அதிரடியாக விளையாடினார்.அவர் 42பந்தில் 5பவுண்டரி,2சிக்சருடன் 50ரன்னை தொட்டார். ரெய்னா 3சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.அவர் 43ரன்னிலும்,அடுத்து வந்த யூசுப் பதான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.அப்போது இந்தியா 37.3ஓவரில் 4விக்கெட்டுக்கு 247ரன் என்ற நிலையில் இருந்தது. அடுத்து கேப்டன் டோனிகளம் வந்தார்.யுவராஜ்சிங் இங்கிலாந்து பந்து வீச்சை தொடர்ந்து விளாசி தள்ளினார்.அவர் சிக்சர்,பவுண்டரியாய் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். டோனியும் பொறுப்புடன் விளையாடினார்.இந்திய அணி 43.3-வது ஓவரில் 300ரன்னை தொட்டது. யுவராஜ்சிங் அதிரடியாக சதம் அடித்தார்.64பந்தில் 11பவுண்டரி,4சிக்சருடன் 100ரன்னை தொட்டார்.அப்போது ஸ்கோர் 335ஆக இருந்தது. டோனி 32பந்தில் 1சிக்சர்,3பவுண்டரியுடன் 39ரன் எடுத்து அவுட் ஆனார். யுவராஜ்சிங்கின் தொடர் அதிரடி ஆட்டத்தால் ரன் மளமள என்று குவிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 387ரன் குவித்தது.யுவராஜ்சிங் 78பந்தில் 16பவுண்டரி,6சிக்சருடன் 138ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் 388க்கு வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 229ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் முலம் இந்தியா 158ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதி வேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் யுவராஜ்சிங் சாதனை யுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் இன்று அனல் பறந்தது.ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 64பந்தில் (11பவுண்டரி,4சிக்சர்) சதம் அடித்தார். இதன் மூலம் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனையை யுவராஜ்சிங் படைத்தார்.அசாருதீன் 1988ம் ஆண்டு நிïசிலாந்துக்கு எதிராக 62பந்தில் (3 சிக்சர்,10 பவுண்டரி),சதம் அடித்து இருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் எப்போதுமே அதிரடியாக ஆடக்கூடியவர்.20ஓவர் உலக கோப்பை போட்டியில் அந்த அணி வீரர் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6சிக்சர் அடித்து முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது மிகப் பெரிய ஸ்கோர் இந்தியா சாதனை இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5விக்கெட் இழப் புக்கு 387ரன் குவித்தது. அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஒருநாள் போட்டியின் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது வாகும்.2007-ம் ஆண்டு உலக கோப்பையில் பெர் முடாவுக்கு எதிராக இந்திய அணி 5விக்கெட் இழப்புக்கு 413 ரன் குவித்து இருந்தது. இந்திய அணியின் ஸ்கோரில் இன்று 13சிக்சர்களும்,38 பவுண்டரிகளும் அடங்கும்.யுவராஜ் 6சிக்சரும்,ஷேவாக்,ரெய்னா தலா 3சிக்சரும்,டோனி ஒரு சிக்சரும் அடித்தனர். யுவராஜ் 16 பவுண்டரியும்,ஷேவாக் 10 பண்டரியும்,காம்பீர் 8 பவுண்டரியும்,டோனி 3 பவுண்டரியும்,ரோகித் சர்மா 1 பவுண்டரியும் அடித் தனர். இந்தியாவின் ஒவ்வொரு 100 ரன் விவரம்:- 100 ரன்-16.2 ஓவர் 200 ரன்-31.5 ஓவர் 300 ரன்-43.5 ஓவர் 387 ரன்-50 ஓவர் இந்தியாவின் ரன்ரேட் 7.74 ஆகும். |
No comments:
Post a Comment